AI tools: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இன்று அனைத்து துறைகளிலும் வேகமாக வேலை முடிக்க AI கருவிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இங்கே உங்கள் பணியை எளிதாக்கும் 5 பயனுள்ள AI கருவிகளை பார்ப்போம்!
AI tools: எழுத்து, வடிவமைப்பு, வீடியோ எடிட்டிங், மொழிப்பிழை திருத்தம், கற்பனைப் படங்கள் வரை — இப்போது எல்லாம் AI மூலம் விரைவாக முடிக்கலாம். ChatGPT முதல் Synthesia வரை, ஒவ்வொரு துறைக்கும் ஏற்ற சிறந்த கருவிகள் இதோ!
1/5ChatGPT மனிதர்களைப் போல உரையாடக்கூடிய திறமை கொண்ட செயற்கை நுண்ணறிவு கருவி. ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் விரைவாக உள்ளடக்கம் உருவாக்க பயன்படுத்துகிறார்கள்.
2/5DALL·E படங்களை உருவாக்கும் AI கருவி. எந்தவொரு உரையையும் கொண்டு கற்பனையாகவும், யதார்த்தமாகவும் புகைப்படம் போல உருவாக்க முடியும் தன்மை கொண்டது. வடிவமைப்பாளர்கள், விளம்பரத்துறையினர் மற்றும் கலைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
3/5Grammarly ஆங்கில எழுத்துப் பிழைகளை சுட்டிக்காட்டி சரிபார்க்கும் AI கருவி. மெசேஜ், மின்னஞ்சல், கட்டுரை போன்றவற்றை தெளிவாகவும் நெறிப்பூர்வமாகவும் எழுத உதவுகிறது.
4/5Runway ML வீடியோ எடிட்டிங், கிரீன் ஸ்கிரீன் அகற்றல், real-time object tracking போன்ற படைப்பாற்றல் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் AI. YouTubers, கிரியேட்டர்கள் மற்றும் திரைத்துறையினர் விரும்பி பயன்படும் கருவி.
5/5Synthesia உண்மையான மனித முகத்தில் போலி வீடியோ உருவாக்கும் AI. நிறுவனம் மற்றும் கல்வி துறைக்கான விளக்க வீடியோக்களை மனித பேச்சு மற்றும் முகபாவனையுடன் உருவாக்க உதவுகிறது.