ஐபிஎல்லில் மிகவும் மந்தமாக விளையாடிய 5 வீரர்கள்!

ஐபிஎல் தொடர் இன்று முதல் மீண்டும் தொடங்கியது. 

இந்த ஐபிஎல் சீசனில் பேட்ஸ்மேன்கள் பலர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தாலும், சிலர் மிகவும் மந்தமாக விளையாடி உள்ளனர். அவர் யார் என்பதை இங்கு பார்க்கலாம். 

1 /5

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்டு அந்த அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மிகவும் மோசமாக செயல்பட்டு உள்ளார். விளையாடிய 11 போட்டிகளில் 128 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் குறைவாக உள்ளது. 

2 /5

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரராக நிதிஷ் குமார் ரெட்டி உள்ளார். இந்த சீசனில் அவர் கடுமையாக சொதப்பி உள்ளார். 10 போட்டிகளில் 173 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 120.14ஆக உள்ளது. 

3 /5

இந்த பட்டியலின் மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த வில் ஜாக்ஸ் உள்ளார். இவர் 10 போட்டிகளில் 142 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 122.41ஆக உள்ளது. 

4 /5

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஃபினிஷராக திகழ்பவர் டேவிட் மில்லர். இவர் 11 போட்டிகளில் 153 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 127.5ஆக உள்ளது. 

5 /5

சிஎஸ்கே அணியில் இருக்கும் ரச்சின் ரவீந்திரா இந்த சீசனில் மந்தமாக விளையாடி உள்ளார். அவர் 8 போட்டிகளில் விளையாடி 191 ரன்கள் சேர்த்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 128.91 மட்டுமே வைத்துள்ளார்.