ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய 5 வீரர்கள்.. இவர்களுக்கு பதில் யார்?

IPL 2025: ஐபிஎல் தொடரில் இருந்து 5 வீரர்கள் விலகி இருக்கின்றனர். அந்த வீரர்கள் யார்? அவர்களுக்கு மாற்று வீரர்கள் யார் என்பதை இங்கு பார்க்கலாம். 

IPL 2025 Ruled Out Players: ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் பெங்களூரு அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த நிலையில், இத்தொடரில் இருந்து விலகி இருக்கும் வீரர்கள் குறித்தும் அவர்களுக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட வீரர்கள் யார் என்பதை குறித்தும் பார்க்கலாம். 

1 /5

லிசாத் வில்லியம்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட இருந்தார். ஆனால் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இத்தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு மாற்று வீரராக கார்பின் போஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

2 /5

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் உம்ரான் மாலிக் காயம் காரணமாக 2025 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார். மெகா ஏலத்தில் இவரை அந்த அணி 75 லட்சத்திற்கு வாங்கியது. இவருக்கு மாற்று வீரராக சேட்டன் சகாரியாவை அந்த அணி தேர்வு செய்துள்ளது. 

3 /5

பிரைடன் கார்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட இருந்தார். ஆனால் கால் விரலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் இத்தொடரைவிட்டு வெள்யேறி உள்ளார். அவருக்கு மாற்று வீரராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வியான் முல்டரை தேர்வு செய்துள்ளது. ஆல்ரவுண்டரான இவர், பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக பங்களிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

4 /5

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து மற்றொரு வீரர் வெளியேறி இருக்கிறார். ஆப்கானிஸ்தானின் ஸ்பின்னரான அல்லா கஜன்ஃபார் மும்பை அணிக்காக விளையாட இருந்த நிலையில், காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார். அவருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸ் அணி முஜிப் உர் ரகுமானை தேர்வு செய்துள்ளது.  

5 /5

இங்கிலாந்து வீரரான ஹாரி புரூக் இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட இருந்தார். இவர் ரூ.6.25 கோடிக்கு டெல்லி அணியால் மெகா ஏலத்தில் வாங்கப்பட்டார். தற்போது சர்வதேச போட்டிகளில் தனது தாய் நாட்டுக்காக கவனம் செலுத்த, இத்தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இதுவரை, இவருக்கான மாற்று வீரரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அறிவிக்கவில்லை.  மேலும், இவரை அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐ தடை செய்துள்ளது. ஹாரி புரூக் கடைசி நேரத்தில் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற முடிவு செய்ததால், பிசிசிஐ இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.   "ஏலத்தில் பதிவுசெய்து, தேர்வு செய்யப்பட்ட பிறகு, சீசன் தொடங்குவதற்கு முன்பு சரியான காரணமின்றி விளையாட முடியாமல் தவிக்கும் எந்தவொரு வீரரும், 2 சீசன்களுக்கு பங்கேற்க தடை விதிக்கப்படுவார்" என்று ஐபிஎல் அறிமுகப்படுத்திய புதிய விதி கூறுகிறது.