6 Food Products That You Should Never Eat With Papaya : பலராலும் விரும்பி சாப்பிடப்படும் பழங்களுள் ஒன்று, பப்பாளி. இதனை, எந்தெந்த உணவு பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது தெரியுமா?
6 Food Products That You Should Never Eat With Papaya : சம்மர் வந்துவிட்டாலே, ஒரு சில பழங்களின் சீசனும் ஆரம்பித்து விடும். அப்படி, பலரால் வெயில் காலத்தில் விரும்பி சாப்பிடப்படும் ஒரு பழம், பப்பாளி. இதில் பலர் சாலட் மற்றும் ஸ்மூதி ஆகியவற்றை செய்தும் சாப்பிடுவர். இதில் பிரச்சனை என்னவென்றால், நாம் சில உணவு பொருட்களை இதனுடன் சேர்த்து சாப்பிடவே கூடாதாம். அவை, என்னென்ன தெரியுமா?
பிளாக் டீ அல்லது கிரீன் டீயுடன் சேர்த்து பப்பாளி பழத்தை சாப்பிடவே கூடாதாம். இதனால் செரிமான கோளாறுகள் ஏற்படுவதோடு, உடலில் வாயு பிரச்சனையை ஏற்படுத்தி விடும் எனவும் கூறப்படுகிறது.
சிட்ரஸ் பழங்களான கிரேப் ஃப்ரூட், ஆரஞ்சு ஆகியவற்றுடன் சேர்த்து பப்பாளி பழத்தை சாப்பிடக்கூடாதாம். இதனால் அசிடிட்டி பிரச்சனை வர வாய்ப்பிருப்பதாகவும், பல சமயங்களில் இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்துவதகாவும் கூறப்படுகிறது.
ஊறுகாய், பழைய சாதம் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளோடு, பப்பாளியை சேர்த்து சாப்பிடக்கூடாது. அதில், ப்ரோபயோடிக்ஸும், பப்பாளியில் என்சைமஸும் இருக்கும். இது, செரிமானத்தை சீர்க்குளைத்து வாயு பிரச்சனையை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
வயிற்றில் ஏற்கனவே பிரச்சனை இருப்பவர்கள், கார உணவுகளை பப்பாளியுடன் சேர்த்து சாப்பிடுகையில் செரிமான பிரச்சனை ஏற்படும் என கூறப்படுகிறது. பப்பாளியில் உணவு செரிமானத்தை சீர்செய்யும் சத்து உள்ளது. கார உணவோடு இதனை சேர்த்து சாப்பிடுகையில், உடலில் உஷ்ணம் அதிகமாகி, வயிற்று வலி ஏற்படலாம் என கூறப்படுகிறது.
புரதம் நிறைந்த உணவுகளை பப்பாளியுடன் சேர்த்து சாப்பிடும் போது, அது தொண்டை மற்றும் வாயில் எரிச்சலை ஏற்படுத்துமாம். எனவே, இறைச்சி, மீன், முட்டை உள்ளிட்டவற்றை சாப்பிடும் போது பப்பாளியை புறக்கணிப்பது நன்று.
பால் மற்றும் அது சார்ந்த பொருட்களை பப்பாளியுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம் என்கின்றனர் மருத்துவர்கள். ஏனென்றால், இவை இரண்டும் வயிற்று உப்பசத்தை அதிகரித்து, வாயு பிரச்சனை மற்றும் வயிற்று வலியை உண்டாக்கும் என கூறப்படுகிறது.
இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் யாவும் அடிப்படை தரவுகளை வைத்து எழுதப்பட்டவை. இதனை ஜீ மீடியா (ZEE MEDIA) உறுதிப்படுத்தவில்லை. மேலும், இதற்கு எங்கள் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்பது குறிப்பிடத்தக்கது.