SENA நாடுகளில் இந்தியாவுக்காக அதிக சதங்கள் அடித்த 6 வீரர்கள்!

Most Centuries By Indian Players IN SENA: இந்தியாவுக்காக தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் அதிக சதங்களை அடித்த 6 வீரர்கள் யார் யார் என இங்கு பார்க்கலாம். 

1 /6

SENA நாடுகளில் 26 சதங்களை அடித்து மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அழுத்தமான சூழ்நிலைகளில் ரன்களை சேர்க்கக்கூடிய டெண்டுல்கரின் தகவமைப்புத் தன்மை மற்றும் அனைத்து சூழ்நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் தன்மை ஆகியவை ஒப்பிட முடியாதவை.

2 /6

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர், SENA நாடுகளில் 22 சதங்களை அடித்துள்ளார். 

3 /6

ஹிட்மேன் என ரசிகர்களால் அழைக்கப்படும் ரோகித் சர்மா SENA நாடுகளில் 15 சதங்கள் அடித்துள்ளார். அவரது அதிரடியான பேட்டிங் அனுமுறை இவருக்கு இந்த பெருமையை பெற்றுத்தந்துள்ளது. 

4 /6

இந்திய அணியின் கேப்டன்களில் மிகவும் முக்கியமானவர் சவுரவ் கங்குலி. இவர் SENA நாடுகளில் 13 சதங்கள் அடித்துள்ளார். 

5 /6

தி வால் என போற்றப்படும் ராகுல் டிராவிட் SENA நாடுகளில் 13 சதங்கள் அடித்துள்ளார். அவரது நிதானமான ஆட்டம் இந்திய அணிக்கு பலமுறை கைக்கொடுத்துள்ளது. 

6 /6

இந்த பட்டியலின் 6வது இடத்தில் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் உள்ளார். அவர், SENA நாடுகளில் 10 சதங்கள் அடித்துள்ளார். தற்போது இங்கிலாந்தில் அவர் அடித்த 2 சதங்களும் இங்கு அடங்கும்.