Books Recommended Actress Rashmika Mandanna : நம்மில் பலருக்கு புத்தகம் படிக்க பிடிக்கும். அப்படி, நம்மை போன்ற புத்தக பிரியைகளுள் ஒருவராக இருக்கிறார், ராஷ்மிகா. இவர் பரிந்துரைக்கும் சில புத்தகங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Books Recommended Actress Rashmika Mandanna : தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகையாக விளங்கி வருபவர், ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் இவர் ஸ்ரீவள்ளி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு சினிமா மட்டுமல்ல, புத்தகங்களும் படிக்க பிடிக்குமாம். அப்படி, இவர் பரிந்துரைக்கும் சில புத்தகங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
பலரால், ‘நேஷனல் க்ரஷ்’ என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர், ஒரு புத்தக பிரியரும் கூட. இவர் பரிந்துரைக்கும் சில சிந்தனையை தூண்டும் புத்தகங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
When Breath Becomes Ai: இந்த புத்தகத்தை பால் கலானிதி எழுதியிருக்கிறார். அவரது வாழ்க்கை அனுபவத்தை பற்றி பேசும் இந்த புத்தகம், நமக்குள் பல கேள்விகளையும் சிந்தனைகளையும் எழுப்பும் புத்தகம் ஆகும்.
Ikigai: The Japanese Secret to a Long and Happy Life: ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்த புத்தகம், பல மொழிகளில் மொழிப்பெயர்கப்பட்டிருக்கிறது. வாழ்வை மகிழ்ச்சியாகவும், பயணுள்ளதாகவும் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை கூறும் புத்தகம் இது.
Tuesdays with Morrie: மிட்ச் ஆல்பாம் எழுதியிருக்கும் புத்தகம் இது. தன் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கும் ஒருவர், வாழ்க்கை குறித்து உணர்ந்த பின்பு எழுதும் புத்தகம் இது.
The Secret : ரோண்டா பைரின் எழுதியிருக்கும் புத்தகம் இது. வாழ்வில் நாம் அனைத்தையும் பாசிடிவாக யோசித்தால், எப்படி நம்மை சுற்றி இருக்கும் விஷயங்கள் மாறும் என்பதை காண்பிக்கும் புத்தகம் இது.
The Spy: பிரபல எழுத்தாளர், Paulo Coelho எழுதியிருக்கும் புத்தகம், தி ஸ்பை. இதில், உளவாளி என்று தவறாக கருதி கைது செய்யப்படும் பெண்ணின் கதையை கூறுகிறது இந்த புத்தகம்.
The Little Big Things: தி லிட்டில் பிக் திங்க்ஸ் புத்தகத்தை சுதா மூர்த்தி எழுதியிருக்கிறார். இதில், நாம் தினசரி நம் வாழ்வில் செய்யும் சிறு விஷயங்கள், எப்படிப்பட்ட பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இந்த புத்தகம் எடுத்து காட்டுகிறது.