Gold Rate Latest News: இந்தியாவில் தங்கம் விலை எட்டாங்கனியாக இருக்கும் நிலையில், தங்கத்தை மலிவு விலையில் எங்கெல்லாம் வாங்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களின் பிரதான முதலீடாகவும், சேமிப்பாகவும் இருப்பது தங்கம் தான். ஆனால், தங்கம் விலை தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தங்கம் வாங்குவது நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் சவாலாகவே உள்ளது.
இருப்பினும், தங்கத்தை பிரதான முதலீடாக மக்கள் கருதுவதால், தங்கம் எவ்வளவு ஏறினாலும் தொடர்ந்து வாங்கிக் கொண்டே வருகின்றனர். தற்போது தங்கம் விலை குறைந்து வந்தாலும், வரும் நாட்களில் இதே நிலை இருக்குமா அல்லது ஏறுமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், தங்கத்தை குறைந்த விலையில் மற்ற நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. அது எங்கெங்கு என்று பார்ப்போம். தங்க நகரம் என்று அடிக்கடி அழைக்கப்படும் துபாய், தங்கம் வாங்குபவர்களுக்கு உலகளாவிய மையமாகத் தொடர்கிறது. ஏனெனில் அங்கு தங்கத்தின் விலை மலிவாக இருக்கும். துபாயில் ஜிஎஸ்டி கிடையாது. இறக்குமரி வரிகளும் குறைவு.
அமெரிக்காவிலும் தங்கம் மலிவாக கிடைக்கிறது. அமெரிக்காவில் சுங்க வரிகள் இந்தியாவை விடக் குறைவு. உற்பத்தி கட்டணங்களும் குறைவாக இருப்பதால், அமெரிக்காவிலும் தங்கத்தை வாங்கலாம். இருப்பினும், இதனை கடைசி ஆப்ஷனாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஆசியாவிலேயே தங்கம் வாங்குவதற்கு மலிவான இடங்களில் ஹாங்காங் ஒன்று. ஹாங்காங் வரி மற்றும் வாட் இல்லாத நாடாக இருப்பதால், அங்கு தங்கம் விலை மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவை காட்டிலும் ஹாங்காங்கில் தங்கம் விலை குறைவாக இருக்கும்.
துருக்கியிலும் தங்கம் விலை மலிவாக உள்ளது. இறக்குதி வரி மற்றும் வாட் காரணமாக தங்கத்தின் விலை மலிவான விலையில் உள்ளது. 10 கிராம் தங்கத்தின் 10 கிராம் விலை துருக்கியில் சுமார் ரூ.1,13,040 ஆகும் என தெரிகிறது. இந்தியாவை காட்டிலும், துருக்கியில் தங்கம் விலை குறைவாக உள்ளது.
அதேபோல, சிங்கப்பூரிலும் தங்கம் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. 24K கேரட் தங்கம் 10 கிராமுக்கு தோராயமாக ரூ.1,18,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேற்கண்ட நாடுகள் அனைத்து, இந்தியாவை விட மலிவான விலையில் தங்கத்தை விற்பனை செய்கிறது.