கடினமான நேர்காணல்களையும் எளிதாக எதிர்கொள்ளலாம்! 7 டிப்ஸை படிங்க...

7 Tips To Crack Job Interviews : நம் அனைவருக்குமே வேலை என்பது மிகவும் முக்கியம். வேலை வாங்கவேண்டுமென்றால் அதற்கு மிகவும் முக்கியமானது நேர்காணலை சரியாக முடிப்பது. அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான சில டிப்ஸை இங்கு பார்ப்போம். 

7 Tips To Crack Job Interviews : கல்லூரி படிப்பை முடித்த பிறகு அனைவருக்குமே, வேலை வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கும். இதற்கு முக்கியமான ஒரு விஷயம், நேர்காணலை சரியாக எதிர்கொள்வது. கடினமான சில இண்டர்வியூக்களையும் எப்படி எளிதாக கையாள்வது என்பதை இங்கு பார்ப்போம். 

1 /7

எந்த நிறுவனத்திற்கு சென்று நேர்காணலை சந்திக்க இருக்கிறீர்களோ, அந்த நிறுவனம் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான், உங்களை நேர்காணல் செய்பவர்கள் அந்த நிறுவனத்தை பற்றி கேட்கும் போது உங்களால் பதில் கூற முடியும்.

2 /7

பேசும் விஷயத்தை தெளிவாக அவருக்கு பேசும் படி பேச வேண்டும். அதே போல கேட்கப்படும் கேள்விகளுக்கு உளராமல் சரியான பதிலை கொடுங்கள்.

3 /7

உங்களது சுய விவரக்குறிப்பை நேர்காணல் செய்பவர் பார்க்கும் போது, உங்களை பற்றிய அனைத்து விஷயங்களும் அதில் அடங்கியிருக்க வேண்டும். இதில் நீங்கள் எந்தெந்த இடங்களில் எல்லாம் வேலை பார்த்துள்ளீர்கள் என்பதும், அங்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதும் அடங்கியிருக்க வேண்டும்.

4 /7

நீங்கள் தைரியமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை உங்களது உடல்மொழிதான் தெரிவிக்கும். எனவே, கண்களை பார்த்து பேசுவது, பேசுகையில் நேராக அமருவது போன்ற டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

5 /7

நேர்காணல் செய்பவரிடம் ஏதேனும் கேள்வி இருக்கிறது என்றால், அதனை தெளிவாக நேர்பட கேட்க வேண்டும். எதையும் கேட்காமல் விட்டுவிடக்கூடாது. 

6 /7

உங்களுக்கு சவாலான தருணங்கள் நேர்காணலில் ஏற்படும் போது, அதனை பொறுமையாக கையாள வேண்டும். அதே போல இதற்கு முன்னர் நீங்கள் உங்களது முன்னாள் நிறுவனத்தில் சவாலான தருணங்களை எப்படி சமாளித்தீர்கள் என்பதையும் கூறலாம். 

7 /7

நேர்காணலுக்கு செல்கையில் பாசிடிவான மனநிலையில் இருங்கள். அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பதை எப்படி கருதுகிறீர்கள் என்பது உங்களது முகத்தை பார்க்கும் போதே அவருக்கு தெரிந்துவிடும். எனவே, நீங்கள் பாசிடிவாக இருப்பது மிகவும் முக்கியம்.