7 Sugar Alternatives For Weight Loss : உடல் எடையை குறைக்க நாம் டயட்டில் இருந்து சர்க்கரையை நீக்க வேண்டியது அவசியம். அதற்கு பதிலாக நாம் வேறு சில உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.
7 Sugar Alternatives For Weight Loss : நம்மில் பலர், உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக வெள்ளை சர்க்கரையை டயட்டில் இருந்து நீக்கியிருப்போம். இதற்கு பதில் வேறு சில உணவுகளை சேர்த்துக்கொண்டால் உடல் எடையை குறைக்க அது பயணுள்ளதாக இருக்கும். அவை என்னென்ன தெரியுமா?
வெள்ளை சர்க்கரையை விட, சுவையிலும் ஆரோக்கியத்திலும் சிறந்த இயற்கை உணவுகளுள் ஒன்ரு இந்த வெல்லப்பாகு. இதனை அடிக்கடி எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும், ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்பது போல இருக்கும் நேரத்தில் இதனை சாப்பிடலாம்.
வாழைப்பழங்களை காயவைத்து, பேக்கிங் செய்ய இதனை பயன்படுத்துவர். இதனை இயற்கை முறையில் தயாரிப்பவர்களிடம் இருந்து மட்டும் வாங்கவும்.
பனை மரத்திலிருந்து கிடைக்கும் இயற்கையான இனிப்பு பொருள், கருப்பட்டி. இதனை காபி, டீ என பல பானங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தேங்காயின் பூவை வைத்து செய்யும் சர்க்கரையை தேங்காய் சர்க்கரை என்பர், இதனை சாதாரண வெள்ளை சர்க்கரைக்கு பதில் உபயோகிக்கலாம்.
இயற்கையான இனிப்பு பொருளான வெல்லத்தை, நம் வீட்டிலி சர்க்கரை பொங்கல் செய்யவும், கொழுக்கட்டை செய்யவும் பெரும்பாலும் பயன்படுத்துவர். இதையும் நாம் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.
நம் வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் பக்கத்து கடைகளில் கிடைக்கும் பொருட்களுள் ஒன்று, தேன். இதில், இயற்கை வகை தேனை பயன்படுத்தினால் இன்னும் நல்லது.
உடலுக்கு வலு தரும் உணவு பொருட்களுள் ஒன்று, பேரீச்சம்பழம். ஊட்டச்சத்து தரும் இந்த பொருளில் இருந்து சிரப்பையும் உருவாக்குகின்றனர். இதனையும் வெள்ளை சர்க்கரைக்கு பதில் உபயோகிக்கலாம்.