புத்திசாலி பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டம்! ஏன் தெரியுமா?

7 Reasons Why Intelligent Women Are Single : அறிவாளியாக விளங்கும் பெண்களுக்கு காதல் கிடைப்பதும், திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைப்பதும் மிக சிரமம். அது ஏன் தெரியுமா? 

 

7 Reasons Why Intelligent Women Are Single : ஒரு சில பெண்கள், இந்த விஷயத்தையும் ஆழ்ந்து யோசித்தால், அறிவாளியாக விளங்கினால் “உனக்கெல்லாம் மாப்பிள்ளை கிடைக்கிறது கஷ்டம்” என வீட்டில் இருப்பவர்கள் அவர்களிடமே சொல்வதை பார்த்திருப்போம்/கேட்டிருப்போம். நீங்களே கூட அப்படிப்பட்ட அறிவாளி பெண்ணாக இருக்கலாம். இது ஒரு வகையில் உண்மையும் கூட. அதுக்கு பின்னால ஏழு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?

1 /7

அறிவாளியாக விளங்கும் பெண்களுக்கு, தங்களின் மதிப்பு என்ன என்பது தெரியும். இதனால் தனக்கு வரும் ஆள், தன்னைப் போல புத்திசாலியாக இருக்க வேண்டுமெனவும், உணர்ச்சி ரீதியாக அறிவாளியாக இருக்க வேண்டும் எனவும், தன்னைப் போல அவருக்கும் வாழ்க்கையில் பெரிய இலக்கு இருக்க வேண்டும் எனவும் நினைப்பர். ஆனால் துரதிஷ்டவசமாக பெரும்பாலான ஆண்கள் அப்படி இருப்பதில்லை. இதனால் அவர்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது கடினமாகிறது.   

2 /7

தைரியமான, புத்திசாலியான, துணிச்சல் மிக்க பெண்களை பார்க்கும்போது சில ஆண்களுக்கு பயம் ஏற்படுகிறது. தன்னைவிட அவள் உயர்ந்தவளாக இருந்து விடுவாளோ, தனக்கு மேல் வளர்ந்து விடுவாளோ என்ற இதுபோன்ற பயங்களே சில ஆண்களுக்கு இதுபோன்ற அறிவாளி பெண்களை பிடித்திருந்தாலும் அவர்களிடம் பேசாமல் இருக்க காரணமாக இருக்கிறது.

3 /7

அறிவாளி பெண்கள் ஆண்களிடமிருந்து எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு நல்ல முதிர்ச்சி பெற்ற உறவுதான். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் அறிவை விட அழகுதான் தேவைப்படுகிறது. ஒரு புத்திசாலி பெண்ணை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு நிறைய நேரம் எடுக்கும். இதற்கு பெரும்பாலான ஆண்களுக்கு பொறுமை இருப்பதில்லை. இதனால் அவர்கள் அப்படி அறிவுடன் இருக்கும் பெண்களை அப்ரோச் செய்வதுமில்லை.  

4 /7

புத்திசாலி பெண்கள் தனக்கென்று ஒரு காதல் கமிட்மெண்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு முன், தன்னுடைய கெரியரை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துகின்றனர். இதனால், அவர்கள் தங்களின் வேலையில் வளர்கிறார்களே தவிர டேட்டிங் இருக்கும் காதல் வாழ்க்கைக்கோ பெரிதாக வளர்வதில்லை.  

5 /7

தவறான ஆளை செலக்ட் செய்து ஒரு டாக்ஸிக்கு ரிலேஷன்ஷிப்பில் சிக்குவதை விட சிங்கிளாகவே இருந்து கொள்ளலாம் என புத்திசாலி பெண்கள் நினைப்பதுண்டு. இதனால் தான் யாருடன் நேரம் செலவிடுகிறோம் யார் மீது காதல் கொள்கிறோம் என்பதில் அவர்கள் மிக மிக தெளிவாக உள்ளனர். இது அவர்களின் டேட்டிங் வாழ்க்கையை சுருக்குகிறது.  

6 /7

ஆண்கள், பெண்களை கவர வேண்டுமென்றால் என்னென்ன மாதிரியான பொய் சொல்லுவார்கள், எப்படி எல்லாம் நடிப்பார்கள் என்பதை இவர்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரியும். இவளிடம் பொய் கூறினால் கண்டுபிடித்து விடுவாளே என்ற பயத்தினாலேயே பல ஆண்கள் இவரிடம் நெருங்க பயப்படுவர். இப்படி ஏமாற்றுவதற்கு இவர்கள் எளிதாக இல்லாமல் இருப்பதால் காதல் அமைவதும் கடினம் ஆகிறது.   

7 /7

பெரும்பாலான ஆண்கள் எதிர்பார்ப்புகள் “பெண் என்றால் சமைக்க வேண்டும், வீட்டு வேலை செய்ய வேண்டும், கணவனுக்கு கீழ் இருக்க வேண்டும்” என்பது போன்ற தவறான கலாச்சார எதிர்பார்த்துகளாக உள்ளது. ஆனால் புத்திசாலி பெண்கள் தங்களுக்கு சம உரிமை, சுயமரியாதை உள்ளிட்ட ஆண்களுக்கு எளிதாக கிடைக்கும் அடிப்படை விஷயங்கள் தேவை என நினைக்கின்றனர். இது பெரும்பாலான ஆண்களின் எண்ணங்களுக்கு எட்டாததால் புத்திசாலி பெண்களால் எளிதில் தனக்கென்ற ஆண்மகனை கண்டுபிடிக்க கடினமாக உள்ளது