Indian States That Are Rich In Cultural Heritage : இந்தியாவையும் கலாச்சாரத்தையும் பிரிக்கவே முடியாது. அப்படி, இந்தியாவின் எந்தெந்த மாநிலங்கள் கலாச்சார வகையில் முன்னோடியாக இருக்கிறது தெரியுமா?
Indian States That Are Rich In Cultural Heritage : இந்தியாவின் சில மாநிலங்கள் கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் முன்னணியில் இருக்கின்றன. இந்த மாநிலங்களின் உணவுகள் முதல், நடனம் மற்றும் கட்டடங்கள் வரை அனைத்தும் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் இருக்கும். அப்படிப்பட்ட மாநிலங்கள் எவை, அதில், தமிழ் நாட்டிற்கு எந்த இடம்? அது குறித்து இங்கு பார்ப்போம்.
ராஜஸ்தானில் இருக்கும், பெரிய பெரிய மாளிகைகள் கலாச்சாரத்தை பரைசாற்றும் வகையில் உள்லன. ஜெய்பூர், உதய்பூர், ஜெய்சல்மார் உள்ளிட்டவை அதற்கு சான்றாக இருக்கின்றன.
தமிழகத்தில் ராஜாக்களின் வாழ்விடங்களை பரைசாற்றும் இடங்கள், கோயில்கள், மனற்சிற்பங்கள் என பல உள்ளன. பிரக்தீஷ்வரர் கோயில், மீனாட்சியம்மன் கோயில், மகாபலிபுரம் ஆகியவை அதற்கு பெரிய சான்றாகும்.
ரவீந்திரநாத் தாகூரின் பிறப்பிடமான மேற்கு வங்காளத்தில், தெய்வங்களின் வழிபாடுகள் முதல், மக்கள் வாழும் இடம் வரை அனைத்தும் கலாச்சாரங்களால் நிரம்பியிருக்கின்றன.
கேரளாவின் கதகளி, மோகினியாட்டம் உள்ளிட்டவை உலகளவில் பிரபலமான கலைகள் ஆகும். பழங்கால கோயில்கள், ஆயுர்வேத மூலிகைகள் ஆகியவையும் இதற்கு பெருமை சேர்க்கவல்லது.
உத்தர பிரதேசத்தின் தாஜ் மகால், உலகின் 7 அதிசயங்களுள் ஒன்றாகும். ராமரின் பிறப்பிடமாக கூறப்படும் அய்யோத்தியா, மதுரா உள்ளிட்ட இடங்களில் பிரசித்தி பெற்ற கோயில்கள் இங்கு இருக்கின்றன.
தாண்டியா, காப்ரா உள்ளிட்ட நடனக்கலைகளுக்கு பெயர் போன மாநிலமாக இருக்கிறது குஜராத். இதில் இருக்கும் சூர்ய கோயில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
ஜகன்நாத் கோயில், உலகளவில் பல்வேறு சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்லும் கோயில்களுள் ஒன்றாகும். இங்கு, பழங்கியின மக்களும் தங்களின் பண்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.