7 Reasons Why Skin On Your Palm Is Peeling Off : நம்மில் பலகையில் உரிவதை பார்க்கும் பெரியவர்கள், “உயரமாக வளருகிறாய்” என்று கூறுவர். ஆனால், அதற்கு உண்மையான காரணம் இதுதானா?
7 Reasons Why Skin On Your Palm Is Peeling Off : நம்மில் பலருக்கு சிறு வயதிலும் சரி, வளர்ந்த பின்பு கூட சரி கைகளில் இருந்து தோல் உரியும். நம்மை சுற்றி இருப்பவர்கள் இதனை பார்க்கும் போது “உயரமாய் வளர்வதால்தான் இப்படி ஆகிறது” என்று கூறுவர். ஆனால், இதற்கு உண்மை காரணம் அதுதானா என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அது குறித்து இங்கு பார்ப்போம்.
கையில் தோல் உரிவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, வறண்ட சருமம். மிகவும் குளிர்ந்த சூழலில் இருக்கும் போது, நிறைய கைக்கழுவி கொண்டே இருந்தால், உபயோகிக்கும் சோப்பு கடினமாக இருந்தால் கையில் தோல் உரியலாம்.
கை எரிச்சல், அரிப்பு, தோல் உரிவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் Eczema எனப்படும் சரும பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அர்த்தம்.
கையில் பூஞ்சை தொற்று ஏற்பட்டாலும் இந்த பிரச்சனை வரலாம். இதனால் கைகளில் தோல் உரிவதோடு, சிவப்பாவது, அரிப்பு ஏற்படுவது போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.
உள்ளங்கை நீண்ட நேரம் வெயிலில் இருந்தால், UV கதிர்களின் பாதிப்பு ஏற்பட்டு, தோல் உரியலாம்.
வைட்டமின் பி, சி அல்லது ஏ குறைபாடுகள், சரும வறட்சி மற்றும் தோல் உரிதலை ஏற்படுத்தலாம். ஏனெனில் இந்த வைட்டமின்கள் சரும செல்களை சரி செய்யும் நீரேற்றத்திற்கு அவசியமானதாகும்.
கடுமையான சோப்புகள், கையை சுத்தம் செய்யும் ஹேண்ட் சானிடைசர்கள் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்பாலும் தோல் உரியலாம்.
கையில் தோல் உரிவதற்கும், உயரமாவதற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு பிற தரவுகளில் இல்லை என்ற பதிலே வருகிறது. காரணம், வளர்ச்சி என்பது நமது ஹார்மோன்கள் மற்றும் மரபியலை பொறுத்து அமைகிறது. எனவே, இப்படி வளர்ச்சிக்கான அறிகுறிகள் கைகளில் தோன்றாது என்றும் சில மருத்துவர்கள் கூறுகின்றனர்.