முதுகு வலியை மிரட்டி ஓட வைக்கும் 7 சிம்பிள் உடற்பயிற்சிகள்!!

Written ByYuvashreeUpdated byYuvashree
Published: Jan 18, 2025, 12:50 PM IST|Updated: Jan 18, 2025, 01:52 PM IST

7 Simple Exercise That Will Relieve Back Pain : பலருக்கு ஓயாத முதுகு வலி பிரச்சனை இருக்கும். அவர்கள், வீட்டில் சில உடற்பயிற்சிகளை செய்தாலே முதுகு வலி பிரச்சனைகள் தீரும். அவை என்னென்ன தெரியுமா?

Cat Cow Stretch1/7

முதுகு வலியை குறைக்கும் உடற்பயிற்சிகளுள் முக்கியமானது இது. தரையில் முட்டி மற்றும் கையால் நின்று, முதுகை முன்னும் பின்னும் வளைத்து இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும். 

Childs Pose2/7

சைல்ட்ஸ் போஸ் பயிற்சியை, செய்ய முதலில் முடி போட்டு அமர வேண்டும். அதன் பிறகு, பின்பக்கமாக முதுகை வளைத்து முட்டிக்கு நேராக தலையை வைத்து படுக்க வேண்டும். 

Pelvic Tilts3/7

முதுகுப்பக்கமாக படுத்து, இடுப்பை மேலே தூக்க வேண்டும். கைகளை இரு பக்கமும் வைத்து தரையில் அழுத்தம் கொடுக்க வேண்டும். 

Knee To Chest4/7

தரையில் Flatஆக படுத்துக்கொண்டு, காலை மார்பு பக்கமாக மடக்கி அப்படியே சில வினாடிகள் வைத்திருக்க வேண்டும். இப்படி கால்களை மாற்றி மாற்றி செய்யலாம். 

Bridge Exercise5/7

தரையில் படுத்து, கால்களை உங்கள் பின்பக்கத்திற்கு நேராக வைத்து இடுப்பை தூக்க வேண்டும். இப்படி தூக்கியவாறே 5-10 வினாடிகள் நிறுத்த வேண்டும். 

Bent Forward6/7

நேராக நின்று, உங்கள் பின்னங்கால்களை நன்றாக கீழே குணிந்து தொட வேண்டும். இந்த போஸில் 20-30 வினாடிகள் நிற்கலாம். 

Spinal Twist7/7

தரையில் அமர்ந்து கொண்டு, இரு கைகளையும் தரையில் வைத்து முதுகை இடது மற்றும் வலது பக்கம் திருப்ப வேண்டும். அப்படி திருப்பும் போது 20 முதல் 30 வினாடிகளுக்கு அப்படியே நிறுத்த வேண்டும்.