7 Tamil Movies Based On Terrorism : பஹல்காம் பள்ளத்தாக்கில், நடந்திருக்கும் சுற்றுலாப்பயணிகளின் மீதான தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதையடுத்து, பயங்கரவாத தாக்குதலை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
1/7கமல்ஹாசன்-அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் 1995ல் வெளியான படம் குருதிப்புனல். இந்த படத்தில், தீவிரவாத கூட்டத்திற்குள் உளவுத்துறை அதிகாரிகள் ஊடுருவுவது குறித்த கதைதான் முக்கியப்புள்ளி. இப்படம் பெரிதும் வெற்றிபெறவில்லை என்றாலும் தமிழ் சினிமாவின் தொன்மையான படங்களுள் இதுவும் ஒன்று.
2/71995ஆம் ஆண்டு வெளியான படம் பம்பாய். 1992-93ல் நடந்த ஒரு உண்மை சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட படம் இது. அரவிந்த் ஸ்வாமி, மனிஷா கொய்ராலா நாயகன் நாயகியாக நடித்திருந்தனர்.
3/71992ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் உருவான படம் ரோஜா. இந்த படத்திலும் அரவிந்த் ஸ்வாமிதான் ஹீரோ. இதில் அவருக்கு ஜோடியாக மதுபாலா நடித்திருப்பார். ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் ஹீரோவை, தீவிரவாதிகள் கடத்தி கொண்டு செல்வதுதான் இதன் மையப்புள்ளி. இப்படம், வந்த புதிதில் பெரிய ஹிட் அடித்தது.
4/7விஜய் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான படம் துப்பாக்கி. இதனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்த படம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் எப்படியெல்லாம் தாக்குதல் நடத்துகின்றனர், எங்கெல்லாம் தாக்குதல் நடத்துகின்றனர் என்பதை கதையாக இது இருந்தது.
5/7கமல்ஹாசன்-மோகன்லால் நடிப்பில் உருவான படம், உன்னைப்போல் ஒருவன். இந்த படத்தை சாக்கிரி டொலெட்டி இயக்கியிருந்தார். இதுவும், தீவிரவாதிகளை பிடித்து வைத்திருப்பவர்களையும், அவர்களை விடுவிக்க தனி ஒரு மனிதனாக ஒருவர் திட்டமிட்டு போராடுவதையும் காண்பித்த படமாகும்.
6/7கீர்த்தி சக்ரா (அரண்) என்ற பெயரில் 2006ஆம் ஆண்டு இப்படம் ரிலீஸானது. இது ஒரு போர்-டிராமா திரைப்படமாகும். ஜீவா மற்றும் மோகன்லால் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருப்பர்.
7/7கடந்த ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் இடம் பெற்றிருந்த படம், அமரன். இதில் சிவகார்த்திகேயன் நடித்டிருந்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை வைத்தும், புல்வாமா தாக்குதலை அடிப்படையாக வைத்தும் உருவாக்கப்பட்ட படம் இது.