ஷ்ஷ்..‘இந்த’ 7 விஷயத்தை எப்போதும் ரகசியமா வெச்சுக்கணும்! இல்லன்னா பிரச்சனை வரும்..

7 Things You Must Keep Private : நம்மால் அனைத்து விஷயங்களையும் தண்டோரா போட்டு சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அப்படி, உங்கள் வாழ்க்கையை பற்றி நீங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் என்னென்ன?

7 Things You Must Keep Private : ஒரு சில விஷயங்களை நம்மை அறியாமல் நாம் யாரிடமாவது சொல்லிவிட்டால், அது கண்டிப்பாக நமக்கே ஒரு நாள் ஆப்பாக வந்து முடியும். காரணம், அனைத்து மனிதர்களும் நம்மை போலவே நல்ல எண்ணங்கள் கொண்டிருப்பர் என சொல்ல முடியாது. நம் வாழ்க்கை பற்றிய சில விஷயங்களை யாரிடமும் சொல்லாமல் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

1 /7

உங்கள் நிதி நிலை என்ன என்பதை எப்போதும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். நம்பிக்கைக்குரிய சிலரிடம் மட்டும் (அதுவும் தேவைப்பட்டால் மட்டும்) ஷேர் செய்து கொள்ளலாம்.

2 /7

உங்கள் குடும்பத்தினருடன் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை எல்லோரிடமும் கூறிக்கொண்டிருக்க கூடாது. இதனால் உங்களை பற்றிய கிசுகிசுக்கள் பரவலாம்.

3 /7

உங்கள் காதல் அல்லது திருமண உறவில் ஏதேனும் பிரச்சனை என்றால் அதனை சம்பந்தப்பட்ட இருவரும் பேசித்தீர்க்க வேண்டும். மூன்றாம் நபரிடம் சென்று இது குறித்து பேசக்கூடாது. அது அந்த உறவுக்கு முட்டுக்கட்டையாக அமையலாம்.

4 /7

உங்களுக்கென்று இருக்கும் எதிர்கால கணவுகளை நீங்கள் முடிந்தவரை உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சிலர், உங்கள் கனவுகள் குறித்து கேட்கும் போது பொறாமை படலாம், இதனால் உங்கள் கனவுகளை தகர்க்க அவர்கள் ஏதேனும் செய்யலாம்.

5 /7

நீங்கள் என்ன உதவி செய்கிறீர்கள் என்பதை பிறருக்கு தெரிய படுத்தாதீர்கள். நன்கொடை, உணவு வழங்குதல் என எதாக இருந்தாலும் அதனை யாரிடமும் பகிர வேண்டாம்.

6 /7

முன் காலத்தில் என்ன தவறு செய்தீர்களோ, அதையெல்லாம் யாரிடமும் பகிர வேண்டாம். அது எதிர்காலத்தில் உங்களுக்கு எதிராக திரும்பலாம்.

7 /7

உங்களுகென்று இருக்கும் சில புரிய வைக்க முடியாத நம்பிக்கைகளை நீங்கள் யாரிடமும் பகிர வேண்டாம். அது கடவுள் நம்பிக்கையாக இருந்தாலும் சரி, வேறு யாரிடமும் அதனை பகிர வேண்டாம்.