7th Pay Commission: மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். இந்த மாதம் 3 முக்கிய செய்திகள் காத்திருக்கிறான. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission: ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு 3% ஆக இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசாக இருக்கும். மார்ச் 10 ஆம் தேதிக்குள் அரசாங்கம் அகவிலைப்படி அதிகரிப்பை அங்கீகரிக்கக்கூடும். அரசாங்கம் டிஏ உயர்வுக்கான தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ஹோலிக்கு முன் அரசு அகவிலைப்படியை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்சிகரமான மாதமாக இருக்கவுள்ளது. இந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மத்திய அரசிடமிருந்து சில பரிசுகள் கிடைக்கவுள்ளன. குறிப்பாக 3 முக்கிய அறிவிப்புகளை ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்க்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
7வது ஊதியக்குழு: ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு 3% ஆக இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசாக அமையும். டிஏ மற்றும் டிஆர் அதிகரிக்கப்படுவதால் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும். ஹோலி பண்டிகைக்கு முன்னதாக, அரசாங்கம் அகவிலைப்படியை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மார்ச் 10 ஆம் தேதிக்குள் அரசாங்கம் அகவிலைப்படி அதிகரிப்பை அங்கீகரிக்கக்கூடும். அரசாங்கம் டிஏ உயர்வுக்கான தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ஹோலிக்கு முன் அரசு அகவிலைப்படியை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 53% அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை (Dearness Relief) பெற்று வருகிறார்கள். அகவிலைப்படி 3% அதிகரிக்கப்பட்டால், மொத்த டிஏ மற்றும் டிஆர் 56% ஆக உயரும்.
அகவிலைப்படி அதிகரிப்பு ஜனவரி 2025 முதல் அமலுக்கு வரும். ஆகையால் ஜனவரி முதலான டிஏ அரியர் தொகையும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும்.
சம்பள உயர்வு எவ்வளவு? அகவிலைப்படி 3% அதிகரித்தால், ரூ.18,000 அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு மாதா மாதம் அகவிலைப்படி ரூ.540 அதிகரிக்கும். ரூ.40,000 சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மாதத்திற்கு சுமார் ரூ.1200 உயர்வு இருக்கும். ஒரு வருடத்தில் ரூ.14,400 அதிகரிப்பு இருக்கும்.
ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி நிவாரணத்தில் (DR) சமமான அதிகரிப்பு கிடைக்கும். உதாரணமாக, ரூ.30,000 மாதாந்திர அடிப்படை ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தில் (DR) ரூ.900 அதிகரிப்பு இருக்கும்.
ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியில் மாற்றம் செய்யப்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இந்த திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை மாற்றங்களின் அளவீடான தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI-IW) அடிப்படையில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் தீர்மானிக்கப்படுகின்றன.
8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பு சமீபத்தில் வந்தது. மார்ச் மாதம் கூழு அமைக்கப்படும் என கூறப்படுகின்றது. 8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2025 முதல் செயல்படுத்தப்படலாம். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 31, 2024 அன்று நிறைவடைகின்றன. அதன் பிறகு அடுத்த ஊதியக் குழு செயல்படுத்தப்படும்.
8வது ஊதியக்குழு அமைக்கப்பட்ட பிறகு, அதில் தீர்மானிக்கப்படும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை முடிவு செய்யப்படும். இவை இரண்டிலும் பம்பர் அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம், அகவிலைப்படி உயர்பு, 8வது ஊதியக்குழு ஆகியவற்றுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.