அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் நல்ல செய்தி? 18 மாத அகவிலைப்படி அரியர்... யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

Published: Jan 24, 2025, 08:52 AM IST|Updated: Jan 24, 2025, 08:52 AM IST

7th Pay Commission: பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அரசாங்கம் அகவிலைப்படி அரியர் தொகையை வழங்குவது தொடர்பாக ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடும் என்று நம்புகிறார்கள்.

Central Government Employees1/11

சமீபத்தில் 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் நல்ல செய்தியை அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஊழியர்கள் தங்களது மற்றொரு கோரிக்கையும் நிறைவேற்றப்படுமா என்ற ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

7th Pay Commission2/11

7வது ஊதியக் குழு: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி அரியர் தொகையை மீண்டும் அளிக்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த தொகையை அரசாங்கம் அளித்தால் அது அவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.

 

COVID 193/11

உலக மக்களை கொரோனா தொற்றுநோய் ஆட்கொண்ட போது, உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

Pensioners4/11

அப்போது உருவான அசாதாரண சூழலை சமாளிக்க மத்திய அரசு பல வித நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒரு பாகமாக, ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Allowance) ஆகியவை முடக்கப்பட்டன. நிலைமை சற்று சரியானவுடன் முடக்கம் நீக்கப்பட்டது.

18 Months DA Arrrears5/11

முடக்கப்பட்ட அகவிலைப்படி தொகை, அதிக தேவையில் இருந்த நலிந்த பிரிவினரின் நலத்திட்டங்களுக்காக உபயோகிக்கப்பட்டது. அந்த 18 மாத டிஏ அரியர் தொகையை அரசாங்க மீண்டும் அளிக்க வேண்டும் என தற்போது கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

Central Government6/11

NC JCM இன் செயலாளர் கோபால் மிஸ்ரா, நிதி அமைச்சகத்திற்கு எழுதிய ஜனவரி தேதியிட்ட கடிதத்தில், கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத கால அகவிலைப்படி/அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

 

DA Arrears7/11

"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின்படி, நாட்டின் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு செலுத்த வேண்டிய 18 மாத அகவிலைப்படி / அகவிலை நிவாரணம் நிலுவைத் தொகையை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் கோரி வருகிறோம்," என்று அவர் எழுதினார்.

Budget 20258/11

பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அரசாங்கம் அகவிலைப்படி அரியர் தொகையை வழங்குவது தொடர்பாக ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடும் என்று நம்புகிறார்கள்.

18 Months DA Arrears9/11

டிஏ அரியர் வழங்கப்பட்டால் எவ்வளவு தொகை கிடைக்கும்? இதில் கிடைக்கும் தொகை ஊழியர்களின் சம்பளம் மற்றும் தர ஊதியத்தைப் (Pay Scale) பொறுத்து இருக்கும். லெவல் 1 பணியாளர்கள் தோராயமாக குறைந்தபட்சம் ரூ.11,800 முதல் அதிகபட்சமாக ரூ.37,554 வரை பெறுவார்கள். லெவல் 13 பணியாளர்களுக்கு ரூ.144,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும்.

Dearness Allowance10/11

லெவல் 14 ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ.1,82,200 முதல் அதிகபட்சமாக ரூ.2,24,100 வரை பெறுவார்கள். இருப்பினும், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் தோராயமானவையே. பணியாளர்கள் பெறக்கூடும் உண்மையான தொகை மாறுபடலாம். மோடி அரசின் இந்த முடிவால், கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பணவீக்கத்திலிருந்து நிவாரணம் பெறுவார்கள்.

Disclaimer11/11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.