7th Pay commission DA Hike: டிஏ உயர்வு எப்போது அறிவிக்கப்படும்? அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission: கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அரசு ஒவ்வொரு முறையும் ஹோலி பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. ஆனால், இந்த முறை அப்படி நடக்கவில்லை. ஹோலிக்கு பின்னரும் அரசு இன்னும் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றி எதையும் அறிவிக்கவில்லை. இது ஊழியர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகின்றது.
அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், புதிய அகவிலைப்படி ஜனவரி 2025 முதல் அமல்படுத்தப்படும். அதாவது மார்ச் மாத சம்பள உயர்வுடன், ஊழியர்களுக்கு இரண்டு மாத டிஏ அரியர் தொகையும் கிடைக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அரசு ஒவ்வொரு முறையும் ஹோலி பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. ஆனால், இந்த முறை அப்படி நடக்கவில்லை. ஹோலிக்கு பின்னரும் அரசு இன்னும் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றி எதையும் அறிவிக்கவில்லை. இது ஊழியர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் உள்ளது.
மற்றொரு ஏமாற்றமும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு காத்திருக்கிறது. அகவிலைப்படி அதிகரிப்பின் சதவீதத்தால் அவர்கள் ஏமாற்றமடையக்கூடும். உழியர்கள் அகவிலைப்படி 3% அல்லது 4% அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கின்றனர்.
அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) தரவுகளின்படி, இந்த முறை அகவிலைப்படி 2 சதவீதம் மட்டுமே அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. இது கடந்த 7 ஆண்டுகளில் மிகக் குறைவாந அதிகரிப்பாக இருக்கும். ஜூலை 2018 முதல், அரசாங்கம் ஒவ்வொரு முறையும் அகவிலைப்படியை குறைந்தது 3% அல்லது 4% அதிகரித்துள்ளது. சில சமயங்களில் இந்த சதவீதம் இன்னும் அதிகமாகவும் இருந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்த முறை அகவிலைப்படி 2 சதவீதம் மட்டுமே உயர்ந்தால், அது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை ஏமாற்றமடையச் செய்யலாம்.
ஆண்டுக்கு இரண்டு முறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி அதிகரிக்கப்படும். இவற்றுக்கான அறிவிப்பு மார்ச் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் வழக்கமாக வெளிவரும். தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிக்கப்படும்.
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட ஜனவரி 2016 முதல், ஜூலை-டிசம்பர் 2024 க்கு செய்யப்பட்ட கடைசி திருத்தத்திற்குப் பிறகு, அகவிலைப்படி இப்போது 53% அளவை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் அரசாங்கம் 3% அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதன் பிறகு 50% ஆக இருந்த மொத்த அகவிலைப்படி 53% ஆக உயர்ந்தது.
இப்போது, ஜூலை-டிசம்பர் மாதங்களுக்கான AICPI தரவுகளின் அடிப்படையில், 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு டிஏ 2% அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 2018க்குப் பிறகு மிகக் குறைந்த DA உயர்வு: இந்த 2% அகவிலைப்படி அதிகரிப்பு ஜூலை 2018க்குப் பிறகு அல்லது சுமார் 78 மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும். கடைசியாக மிகக் குறைந்த உயர்வு 2018 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் செய்யப்பட்டது, அப்போதும் அகவிலைப்படி 2% அதிகரிக்கப்பட்டது.
அகவிலைப்படி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI-IW) அடிப்படையில் அகவிலைப்படி விகிதம் (DA) தீர்மானிக்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களின் AICPI-IW தரவை பகுப்பாய்வு செய்யப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வு விகிதத்தை அரசாங்கம் தீர்மானிக்கிறது.
தற்போது, மத்திய ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அரசின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நேர்மறையான மதிப்பீடு மற்றும் குறிப்புக்கு பிறகு அகவிலைப்படி 2% க்கும் அதிகமாக உயர்த்தப்படும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த வாரம் இதில் ஒரு தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.