7th Pay Commission New updates: இந்த தேதியில் இருந்து DA, DR சலுகைகள் கிடைக்கும்
லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு நிவாரணம் அளித்து வருவதாக நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஜூலை 1 முதல் ஊழியர்களுக்கு, நிலுவையில் உள்ள முந்தைய மூன்று காலகட்டத்திற்கான தொகையும் கிடைக்கலாம்.
கோவிட் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு ஜனவரி முதல் ஜூலை 2020 வரை (3%) மற்றும் ஜூலை முதல் டிசம்பர் 2020 வரை (4%) மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது 2021 ஜனவரி முதல் ஜூலை வரையிலான டிஏ அறிவிக்கப்பட வேண்டும், இது 4 சதவீதமாக இருக்கலாம். நிலுவையில் இருக்கும் 17 சதவிகித டிஏவையும், கடந்த மூன்று பருவத்திற்கான நிறுத்தி வைக்கப்பட்டதையும் சேர்த்து மொத்தமாக (3 + 4 + 4) 28 சதவிகிதம் வரை அதிகரிப்பு இருக்கலாம்.
டிஏ அதிகரிப்பு அறிவிப்பால், ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். தரவுகளின்படி, சுமார் 50 லட்சம் மத்திய அரசி ஊழியர்கள் மற்றும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் பலன் பெறுவார்கள்.
புதிய தொழிலாளர் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், எதிர்வரும் நிதியாண்டில் இருந்து புதிய தொழிலாளர் சட்டமும் (New Wage Code 2021) அமலுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஏப்ரல் 1 முதல் மோடி அவை அமலுக்கு வருவது அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாறுதல்களை ஏற்படுத்தும்.
டிஏ அதிகரிப்பு அறிவிக்கப்பட்டவுடன், அது உங்கள் சம்பளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். விதிகளின்படி, அடிப்படை சம்பளத்தை கணக்கில் வைத்து, அதற்கேற்றாற் போல பி.எஃப் மற்றும் கிராஜுவிட்டி கழிக்கப்படுகிறது. புதிய சம்பள சட்டத்தின்படி, சி.டி.சி-யில் அடிப்படை சம்பளம் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது.