8வது ஊதியக்குழு: பே ஸ்கேல், ஓய்வூதியம், OPS, ஊதிய உயர்வு.... காத்திருக்கும் 15 பரிசுகள்

8th Pay Commission: 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் என்னென்ன வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்? இதனால் கிடைக்கவுள்ள நன்மைகள் என்ன? முழுமையான தகவலை இங்கே காணலாம்.

8th Pay Commission ToR Proposals: மாநிலங்களவை உறுப்பினர் புவனேஸ்வர் கலிதா எட்டாவது ஊதியக் குழு குறித்து கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசின் சார்பில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தேசிய கூட்டு ஆலோசனை இயந்திரக் குழுவின் (NC-JCM) ஊழியர் தரப்பிலிருந்து பரிந்துரைகளைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார். NC-JCM இந்த ஆண்டு பிப்ரவரியில், 8வது ஊதியக் குழுவிற்கான 15 முக்கிய பரிந்துரைகளை (Terms of Reference) அரசாங்கத்துடன் பகிர்ந்து கொண்டது. அவற்றை பற்றி இங்கே காணலாம்.

1 /15

8வது ஊதியக் குழு மத்திய அரசு, அகில இந்திய சேவைகள், பாதுகாப்பு மற்றும் துணை ராணுவப் படைகள், கிராமப்புற டாக் சேவகர்கள், யூனியன் பிரதேச ஊழியர்கள், தணிக்கை மற்றும் உச்ச நீதிமன்ற ஊழியர்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் (RBI தவிர) மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் ஊழியர்கள் உட்பட பல்வேறு வகையான ஊழியர்களை உள்ளடக்க வேண்டும் என்று NC-JCM முன்மொழிந்துள்ளது.

2 /15

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், 8வது ஊதியக்குழுவிற்கு தகுதியான அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் திருத்தப்பட்ட சம்பளக் கட்டமைப்பை ஆணையம் தயாரிக்க வேண்டும் என்று NC-JCM பரிந்துரைத்தது.

3 /15

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு ஒழுக்கமான மற்றும் கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யும் வகையில், சரியான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க தேசிய கவுன்சில் கூட்டு ஆலோசனை அமைப்பு ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.

4 /15

தற்போதுள்ள ஊதிய நிலைகள் அதாவது பே மேட்ரிக்சை இன்னும் சிறப்பாக்க, நிலை 1 -ஐ நிலை 2 உடனும், நிலை 3 -ஐ நிலை நிலை 4 உடனும், நிலை 5 -ஐ நிலை 6 உடனும் இணைக்க கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

5 /15

மாற்றியமைக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட தொழில் முன்னேற்றம் (MACP) திட்டத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, தெளிவாக வரையறுக்கப்பட்ட படிநிலையில் குறைந்தது மூன்று பதவி உயர்வுகளை உறுதி செய்ய வேண்டும் என்று கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.

6 /15

செயல்முறைகளில் தாமதம் ஏற்பட்டால், கவுன்சில் கோரியபடி, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

7 /15

அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைப்படி நிவாரணம் (DR) ஆகியவற்றின் பொருத்தமான சதவீதத்தை அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துடன் இணைக்கவும் கவுன்சில் பரிந்துரைத்தது.

8 /15

JCM கூட்டங்களில் எழுப்பப்பட்ட 7வது ஊதியக் குழுவின் முரண்பாடுகள் மற்றும் தீர்க்கப்படாத குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என ஆணையத்திடம் கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.

9 /15

சீரான ஓய்வூதிய உயர்வு, கம்யூடட் பென்ஷன் எனப்படும் மாற்றப்பட ஓய்வூதியத்தை மீட்டெடுக்கும் கால அளவை 15 ஆண்டுகளுக்கு பதிலாக 12 ஆண்டுகளாக குறைப்பது, முன்னாள் மற்றும் எதிர்கால ஓய்வூதியதாரர்களுக்கு இடையேயான சமத்துவம், ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஓய்வூதியத்தை மறுபரிசீலனை செய்வது ஆகியவை ஓய்வூதியதாரர்களுக்கான பரிந்துரைகளில் அடங்கும்.

10 /15

பங்களிப்பு ஓய்வூதிய முறையான தேசிய ஓய்வூதிய முறையை (NPS) ரத்து செய்வது மற்றும் CCS (ஓய்வூதியம்) விதிகள் 1972/2021 இன் கீழ் முந்தைய வரையறுக்கப்பட்ட நன்மை அளிக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுப்பது ஒரு முக்கிய கோரிக்கையாக இருந்தது.

11 /15

CGHS தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல், நிலையான மருத்துவ கொடுப்பனவை அதிகரித்தல், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பணமில்லா, தொந்தரவு இல்லாத மருத்துவ சேவையை உறுதி செய்தல் ஆகியவற்றையும் கவுன்சில் கோரியுள்ளது.

12 /15

ஊழியர்களின் குழந்தைகளுக்கு முதுகலை பட்டம் வரை குழந்தை கல்வி கொடுப்பனவு மற்றும் விடுதி மானியத்தை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரைகளில் கோரப்பட்டுள்ளது.

13 /15

தேவை அடிப்படையிலான முன்பணங்களை அறிமுகப்படுத்தவும், முன்னர் நிறுத்தப்பட்ட முன்பணங்களை மீட்டெடுக்கவும் ஊதிய ஆணையத்திற்கு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

14 /15

சவாலான சூழ்நிலைகளில் 24 மணி நேரமும் பணிபுரியும் அனைத்து இந்திய ரயில்வே ஊழியர்களுக்கும் ரிஸ்க் அலவன்சை (ஆபத்தான மற்றும் கடினமான சூழல்களுக்கான கொடுப்பனவு) கொடுப்பனவு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

15 /15

பாதுகாப்பு நிறுவனங்களில் வெடிபொருட்கள் மற்றும் ரசாயனங்கள் போன்ற அபாயகரமான பொருட்களுடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு தனி ரிஸ்க் அலவன்ஸ், காப்பீட்டு பாதுகாப்பு மற்றும் போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.