8வது ஊதியக்குழு: குஷியில் அரசு ஊழியர்கள், 157% சம்பள உயர்வு சாத்தியம், காரணம் இதுதான்

Published: Nov 13, 2025, 09:31 AM IST|Updated: Nov 13, 2025, 09:32 AM IST

8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? பல்வேறு லெவல்களில் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? முழு கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.

8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வையும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வையும் தீர்மானிப்பதில் ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கு முக்கிய பங்கு இருக்கும். இது அதிகமாக இருந்தால், ஊதிய உயர்வும் அதிகமாக இருக்கும். ஓய்வூதிய உயர்வும் இதை சார்ந்தே இருக்கும்.

Central Government Employees1/10

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் அமலாக்கத்திற்கு பிறகு சம்பளமும் ஓய்வூதியமும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊழியர்களின் ஊதியம் 157% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

 

8th CPC Latest News2/10

8வது ஊதியக்குழு

8வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதன் பலன் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 70 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும். ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 18 மாதங்களுக்குள் தங்கள் அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8th Pay Commission3/10

8வது ஊதியக் குழு

இதன் அமலாகம் 2027 ஆண்டில் இருக்கலாம் என கூறப்படுகின்றது. எனினும், ஜனவரி 2026 முதல் 8வது ஊதியக்குழுவின் நன்மைகளுக்கான அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும்.

 

Fitment Factor4/10

ஃபிட்மெண்ட் ஃபாக்டர்

மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வையும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வையும் தீர்மானிப்பதில் ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கு முக்கிய பங்கு இருக்கும். புதிய அடிப்படை ஊதியத்தை தீர்மானிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்போதைய அடிப்படை சமப்ளம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கபட்டு புதிய அடிப்படை சம்பளம் தீர்மானிக்கப்படுகின்றது.

Basic Salary5/10

அடிப்படை ஊதியம்

8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எவ்வளவு இருக்கும் என்பது குறித்து இன்னும் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், இந்த முக்கிய காரணி 1.8 முதல் 3.0 -க்குள் நிர்ணயிக்கப்படலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Central Government Employees6/10

மத்திய அரசு ஊழியர்கள்

பல்வெறு ஃபிட்மெண்ட் ஃபாக்டர்களில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு, ஓய்வுதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வும் எவ்வளவு இருக்கும் என இங்கே காணலாம்.

Salary Hike7/10

சம்பள உயர்வு

ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.8 ஆக அமைக்கப்பட்டால், ரூ.18,000 அடிப்படை சம்பளம் பெறும் லெவல் 1 ஊழியர்களின் சம்பளம் ரூ.32,400 ஆக உயரும். இதேபோல், ரூ.19,900 அடிப்படை சம்பளம் பெறும் நிலை 2 ஊழியர்களின் சம்பளம் ரூ.35,820 ஆகவும், ரூ.21,700 அடிப்படை சம்பளம் பெறும் லெவல் 3 ஊழியர்களின் சம்பளம் ரூ.39,060 ஆகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Salary Hike8/10

ஊதிய உயர்வு

ஃபிமெண்ட் ஃபாக்டர் 2.46 ஆக நிர்ணயிக்கப்பட்டால், லெவல் 1 ஊழியர்களின் சம்பளம் ஊ.44,280 ஆக அதிகரிக்கும். லெவல் 2 ஊழியர்களின் ஊதியம் ரூ.48,954 ஆகவும், லெவல் 3 ஊழியர்களின் சம்பளம் ரூ.53,382 ஆகவும் உயரும். இந்த மாற்றங்கள் வெவ்வேறு நிலைகளில் கணிசமான அதிகரிப்புகளுக்கு வழிவகுக்கும்.

 

Pension Hike9/10

ஓய்வூதிய உயர்வு

ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், ரூ.30,000 ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் புதிய ஓய்வூதியம் ரூ.57,600 ஆக அதிகரிக்கும். ஃபிமெண்ட் ஃபாக்டர் 2.46 ஆக நிர்ணயிக்கப்பட்டால் ஓய்வூதியம் ரூ.73,800 ஆக உயரும். 3.00 ஃபிட்மென்ட் ஃபாக்ரில் ஓய்வூதியம் ரூ.90,000 ஆக ஏற்றம் காணும்.

Disclaimer10/10

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.