8வது ஊதியக்குழு: அடேங்கப்பா!!! அரசு ஊழியர்களுக்கு 92%-186% சம்பள உயர்வு, கணக்கீடு இதோ

8th pay commission Salary Hike: 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் ஊழியர்களுக்கு 186% ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்கான கணக்கீடு என்ன? அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

8th pay commission Latest News: 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு முக்கிய பங்கு இருக்கும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 -க்குள் இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியமும் ஓய்வூதியமும் அதிகரிக்கும்.

1 /10

தீபாவளி நெருங்கி வருகிறது. மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழு பற்றிய செய்திகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பண்டிகைக்கு முன் இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வரும் என்று ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நம்புகிறார்கள்.

2 /10

அரசாங்கம் விரைவில் குழுவை அமைப்பது குறித்த பற்றிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமின்றி குறிப்பு விதிமுறைகளும் (ToR) விரைவில் இறுதி செய்யப்படும் என எதிபார்க்கப்படுகின்றது.

3 /10

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்த நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 -க்குள் இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதிய உயர்வை எவ்வாறு கணக்கிடுவது என இங்கே காணலாம்.

4 /10

8வது ஊதியக் குழு சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்களில் மாற்றங்களைச் செய்யும். இது 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கும் 65 லட்ச ஓய்வூதியதாரர்களுக்கும் ஊதிய உயர்வை கொண்டு வரும். பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2025 இல் கமிஷனுக்கு ஒப்புதல் அளித்தார்.

5 /10

10 ஆண்டு விதிப்படி பார்த்தால் 8வது ஊதியக்குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வர வேண்டும். 2016 முதல் அமலில் உள்ள 7வது ஊதியக் குழு டிசம்பர் 31, 2025 அன்று காலாவதியாகிறது.

6 /10

8வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை தீர்மானிக்க ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மிக முக்கியமானது. தற்போது, ​​7வது ஊதியக்குழுவில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 -க்குள் நிர்ணயிக்கப்படும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய அளவுகளை கணிசமாக உயர்த்தும்.

7 /10

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எவ்வாறு செயல்படுகிறது? தற்போதைய அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டருடன் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் தீர்மானிக்கப்படுகின்றது. உதாரணமாக, 8வது உதியக்குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டால், புதிய அடிப்படை ஊதியம் = 7வது ஊதியக்குழுவின் அடிப்படை ஊதியம் × 2.57. (அகவிலைப்படி 0% இல் தொடங்குகிறது, ஆனால் இணைக்கப்பட்ட கொடுப்பனவுகள் அடிப்படை ஊதியத்தை அதிகரிக்கின்றன)

8 /10

ஊதிய உயர்வை எப்படி கணக்கிடுவது? 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். 7வது ஊதியக்குழுவின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ₹18,000 ஆகும். 2.86 ஃபிட்மென்ட் ஃபாகரில் புதிய குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் = ₹18,000 × 2.86 = ₹51,480 (7வது CPC அடிப்படை ஊதியத்திலிருந்து இது 186% உயர்வு)

9 /10

8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், புதிய குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் = ₹18,000 × 1.92 = ₹34,560 (7வது CPC அடிப்படை ஊதியத்திலிருந்து இது 92% உயர்வு).

10 /10

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.