8வது ஊதியக்குழு: அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 5 ஜாக்பாட் அறிவிப்புகள், லிஸ்ட் இதோ

8th Pay Commission Latest News: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி. 8வது ஊதியக்குழுவில் அவர்களுக்கு 5 ஜாக்பாட் அறிவிப்புகள் காத்திருக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

8th Pay Commission Pensioners: 8வது ஊதியக்குழுவின் மூலம் ஊழியர்களுக்கு பல வித நன்மைகள் நடக்கும் என்பதும் அவர்களது நிதி நிலைமை மேம்படும் என்பதும் அனைவரும் அறிந்ததே. எனினும், புதிய ஊதியக்குழு மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய நற்செய்திகளை அளிக்கும்.

1 /10

8வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய அளவிலான நிவாரணத்தை அளித்துள்ளது. 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2 /10

புதிய ஊதியக்குழு ஊழியர்களின் சம்பளம், அலவன்சுகள் மற்றும் ஓய்வூதிய கட்டமைப்புகளை மதிப்பாய்வு செய்யும். மேலும் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில்  சில மாற்றங்களையும் பரிந்துரைக்கும். நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு ஊழியர்களின் உண்மையான வருமானத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 8வது ஊதியக்குழு இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்து அரசு ஊழியர்களின் வாங்கும் சக்தியை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

3 /10

8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் காரணமாக ஊழியர்களுக்கு பல வித நன்மைகள் நடக்கும் என்பதும் அவர்களது நிதி நிலைமை மேம்படும் என்பதும் அனைவரும் அறிந்ததே. எனினும், புதிய ஊதியக்குழு மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய நிவாரணங்களை அளிக்கும். 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பின்வரும் நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

4 /10

8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 முதல் 3.0 -க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வு தீர்மானிக்கப்படும்.

5 /10

பல்வேறு ஃபிட்மெண்ட் ஃபாக்டர்களின் அடிப்படையில், ரூ.30,000 அடிப்படை ஓய்வூதியம் ரூ.30,000 வாங்கும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வு இந்த வகையில் இருக்கும்: 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.57,60 / 2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.62,400 / 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.68,400 / 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.77,100 / 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.85,800 / 3.00 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.90,000

6 /10

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது மொத்த ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை ஒரே நேரத்தில் மொத்தமாக எடுக்கும் வசதி உள்ளது. இதற்கு ஈடாக ஓய்வூதியத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு மாதமும் கழிக்கப்படுகின்றது.  கம்யூடட் பென்ஷன், அதாவது மாற்றப்பட்ட ஓய்வூதிம் 15 ஆண்டுகள் வரை மாத ஓய்வூதியத்திலிருந்து கழிக்கப்படுகின்றது. அதன் பின்னர் ஓய்வூதியதாரர்களுக்கு முழு ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும். இந்த ஓய்வூதிய மீட்பு காலத்தை 15 ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.

7 /10

தற்போதுள்ள விதிகளின்படி 80 வயதுக்கு பிறகு ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் அளிக்கப்படுகின்றது. கூடுதல் ஓய்வூதியம் தொடங்கும் வயதை 65 ஆக குறைக்க வேண்டும் என்றும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அர்சிடம் பரிந்துரைகப்பட்டுள்ளது.

8 /10

ஜனவரி 1, 2004 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்டவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய ஓய்வூதிய முறை மூலம் இவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படுகின்றது.

9 /10

மத்திய அரசு சுகாதாரத் திட்டத்திலும் (CGHS) பல வித மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேம்பட்ட மருத்துவ வசதிகள், அதிக மருத்துவமனைகள், பணமில்லா சிகிச்சை, ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மேம்பட்ட வசதிகள் ஆகியவை இவற்றில் அடங்கும்.

10 /10

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.