8th Pay Commission: 8வது ஊதியக்குழுவில் என்னென்ன முக்கிய மாற்றங்கள் இருக்கும்? இதனால், யாருக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்? இது எப்போது அமலுக்கு வரும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
8th CPC Latest News: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும் வகையில், மத்திய அரசு ஜனவரி மாதம் 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஓய்வு பெற்ற பணியாளர்களின் ஓய்வூதியத்திற்கும் ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும்.
நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வரும் மாதங்களில் பல முக்கிய செய்திகள் கிடைக்கவுள்ளன. இது அவர்களின் நிதி நிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும் வகையில், மத்திய அரசு ஜனவரி மாதம் 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஓய்வு பெற்ற பணியாளர்களின் ஓய்வூதியத்திற்கும் ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும்.
8வது ஊதியக்குழுவில் என்னென்ன முக்கிய மாற்றங்கள் இருக்கும்? இதனால், யாருக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்? இது எப்போது அமலுக்கு வரும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதிய ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படும்: 8வது ஊதியக் குழுவின் கீழ் திருத்தப்பட்ட விகிதங்கள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. இந்த ஆணையம் சுமார் 1 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நேரடியாக பயனளிக்கும். இதில் 36 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் அடங்குவர்.
கடந்த 7வது ஊதியக் குழுவில், சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் நல்ல அதிகரிப்பு இருந்தது. எனினும், கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசி, பணத்தின் மதிப்பு ஆகியவற்றில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆகையால் அடுத்த ஊதியக்குழுவான 8வது ஊதியக்குவின் மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர்.
8வது ஊதியக் குழுவின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, இந்த முறை ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.28 முதல் 2.86 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன? இது ஒரு பெருக்கி ஆகும். ஊழியர்களின் தற்போதைய அடிப்படை சம்பளம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் தீர்மானிக்கப்படுகின்றது.
உதாரணமாக, 7வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. இதன் காரணமாக குறைந்தபட்ச சம்பளம் ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆக அதிகரித்தது. இந்த முறை ஃபிட்மென்ட் ஃபாக்டரைப் பொறுத்து அடிப்படை சம்பளம் 40-50% அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். அதாவது, ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ.50,000 என்றால், அது ரூ.70,000 முதல் ரூ.75,000 வரை அதிகரிக்கலாம்.
சம்பளத்தில் அகவிலைப்படியை இணைப்பது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? வருடத்திற்கு இரண்டு முறை திருத்தப்படும் அகவிலைப்படி (DA), பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 8வது சம்பளக் குழுவில் ஒரு பெரிய மாற்றமாக அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படலாம். இது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை மேலும் அதிகரிக்கும், இது அவர்களின் ஓய்வூதியம் மற்றும் பிற கொடுப்பனவுகளையும் பாதிக்கும். இது தவிர, ஜூலை 2025 இல் மற்றொரு அகவிலைப்படி உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கு கூடுதல் நிவாரணத்தைக் கொண்டுவரும்.
ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்புகள்: முந்தைய சம்பளக் குழுக்கள் மத்திய ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன. இப்போது 8வது சம்பளக் குழுவிடமிருந்தும் ஊழியர்களுக்கு இதே போன்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. குறிப்பாக அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் தங்கள் செலவுகளைச் சமப்படுத்த போராடும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த ஆணையம் நிதி நிவாரணம் வழங்குவதோடு மட்டுமல்லாமல் மன உறுதியையும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? ஒரு உதாரணத்தின் மூலம், எதிர்பார்க்கப்படும் ஊதிய உயர்வு பற்றி புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 என வைத்துக்கொள்வோம். 2.28 மற்றும் 2.86 ஃபிட்மெண்ட் ஃபாக்டர்களில் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் என இங்கே காணலாம்.
ஓய்வூதிய உயர்வு: ஒரு ஓய்வூதியதாரர் அடிப்படை ஓய்வூதியமாக ரூ.30,000 பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். 2.28 மற்றும் 2.86 ஃபிட்மெண்ட் ஃபாக்டரில், திருத்தப்பட்ட ஓய்வூதியம் என்னவாக இருக்கும் என இங்கே காணலாம். - 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.68,400 / - 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.85,800
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.