8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ். அகவிலைப்படி கணக்கீட்டில் மாற்றம் ஏற்படவுள்ளது. இதனால் ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும்.
8th Pay Commission DA Calculation: நாடு முழுவதும் லட்சக்கணக்கான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது பல கேள்விகள் உள்ளன. ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? அலவன்சுகளில் என்ன ஏற்றம் இருக்கும்? அகவிலைப்படி கணக்கீட்டால் என்ன பாதிப்பு ஏற்படும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான ஒரு செய்தி உள்ளது. 8வது ஊதியக்குழுவில் பல வித மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதில அகவிலைப்படியில் ஏற்படவிருக்கும் மாற்றத்தினால் ஊதியத்தில் அதிக தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
8வது ஊதியக்குழுவில் 10 வருட பழமையான அகவிலைப்படி கணக்கிடும் விதியை அரசாங்கம் மாற்றக்கூடும். இதன் கீழ், அடிப்படை ஆண்டை மாற்றிய பிறகு, அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்படும். இதனால் ஊழியர்கள் எந்த இழப்பையும் சந்திக்க வேண்டியதில்லை. தற்போதுள்ள அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும், இது அவர்களின் மொத்த சம்பளத்தை அதிகரிக்கும்.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது பல கேள்விகள் உள்ளன. ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? அலவன்சுகளில் என்ன ஏற்றம் இருக்கும்? அகவிலைப்படி கணக்கீட்டால் என்ன பாதிப்பு ஏற்படும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசின் அகவிலைப்படி கணக்கிடுவதற்கான 10 வருட பழமையான விதி மாறப்போகிறது. அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்படும். மேலும் அகவிலைப்படி கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டும் மாற்றப்படும். இதனால் ஊதியத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என இங்கே காணலாம்.
7வதுதியக்குழுவின் கீழ், அகவிலைப்படி தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் தரவை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றது. இந்தக் குறியீட்டிற்கு ஒரு அடிப்படை ஆண்டு உள்ளது. அதன் அடிப்படையில் அகவிலைப்படி ஒப்பிடப்படுகிறது. தற்போதைய விதியின் படி, அகவிலைப்படியைக் கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு 2016 ஆகும்.
8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் ஜனவரி 1, 2026 முதல் இருக்கும் என அனுமானிக்கப்படுவதால், அகவிலைப்படி கணக்கீட்டின் சூத்திரத்தில் அடிப்படை ஆண்டு 2026 ஆக மாற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த மாற்றம் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் காரணமாக உங்கள் எதிர்கால அகவிலைப்படி கணக்கீட்டில் அகவிலைப்படி புதிய மற்றும் பெரிய அடிப்படை சம்பளத்தில் கணக்கிடப்படும். இதன் மூலம் பெறப்படும் தொகை அதிகமாக இருக்கும், மேலும் காலப்போக்கில் உங்கள் சம்பளம் இன்னும் வேகமாக அதிகரிக்கும்.
மேலும் 8வது உதியக்குழுவின் கணக்கீட்டின் போது அகவிலைப்படி சதவிகிதம் எவ்வளவு இருக்கிறதோ, அது பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு, அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும். இதன் மூலம் அடிப்படை ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும். அதன் அடிப்படையில் ஏற்படும் சம்பள உயர்வு மிகப்பெரியதாக இருக்கும். மேலும் அதன் பின்னர் அகவிலைப்படி கண்ணக்கீடு 1%, 2%, 3% என தொகடங்கும்.
அடிப்படை ஊதிய கணக்கீட்டில் முக்கிய பங்கு வகிக்கும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர், 8வது ஊதியக்குழுவில் 1.92 முதல் 2.86 -க்குள் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் எதுவும் வரவில்லை. அதன் அடிபப்டையில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வும் எவ்வளவு இருக்கும் என இங்கே காணலாம்.
ஒரு உதாரணத்தின் மூலம் ஊதிய உயர்வு கணக்கீட்டை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 என வைத்துக்கொள்வோம். 1.92 - 2.86 ஃபிட்மெண்ட் ஃபாக்டர்களில் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.34,560 / 2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.37,440 / 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.41,040 / 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.46,260 / 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.51,480
ஓய்வூதிய உயர்வு கணக்கீட்டையும் ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஒரு ஓய்வூதியதாரரின் அடிப்படை ஓய்வூதியம் ரூ.30,000 என வைத்துக்கொள்வோம். 1.92 - 2.86 ஃபிட்மெண்ட் ஃபாக்டர்களில் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.57,600 / 2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.62,400 / 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.68,400 / 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.77,100 / 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.85,800
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.