8வது ஊதியக்குழு: சம்பளத்துடன் ஓய்வூதியம், போனஸ், கிராஜுவிட்டி, போனஸ்... அனைத்தும் உயரும்

8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. 8வது ஊதியக்குழுவில் பல வித நன்மைகள் காத்திருக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக் குழுவிற்கான TOR அக்டோபர் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. சம்பளம் மட்டுமல்லாமல் போனஸ், கிராச்சுவிட்டி, வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), பயண கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்கள் போன்ற அனைத்து சலுகைகளும் மதிப்பாய்வு செய்யப்படும் என TOR இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 /10

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் மிகப்பெரிய செய்தி கிடைத்தது. மத்திய அரசு பரிந்துரை விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்ததோடு, குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களையும் நியமித்தது.

2 /10

இனி அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவாக நடைபெறும். 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வுதியதாரர்களின் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். இதைத் தவிரவும் ஊழியர்களுக்கு இன்னும் பல நன்மைகளும் நடக்கும்.

3 /10

8வது ஊதியக் குழு அமலுக்கு வந்த பின்னர், சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் அதிகரிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், போனஸ், கிராச்சுட்டிகள் மற்றும் கொடுப்பனவுகளிலும் மாற்றங்கள் இருக்கும். அமைச்சரவை சமீபத்தில் குறிப்பு விதிமுறைகளை (TOR) அங்கீகரித்துள்ளதால், ஆணையம் விரைவில் பணியைத் தொடங்கும் என்ற நம்பிக்கை வலுவாக உள்ளது. இது 50 லட்சம் ஊழியர்களுக்கும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 /10

8வது ஊதியக் குழுவிற்கான TOR அக்டோபர் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இது போன்ற உயர்மட்ட வழக்குகளில் முன் அனுபவமுள்ள ஓய்வுபெற்ற நீதிபதியான நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் இதற்கு தலைமை தாங்குவார். ஆணையத்தில் ஒரு பகுதிநேர உறுப்பினர் மற்றும் ஒரு உறுப்பினர் செயலாளரும் இருப்பார்கள். பேராசிரியர் புலக் கோஷ் பகுதிநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் பங்கஜ் ஜெயின் உறுப்பினர் செயலாளராக இருப்பார்.

5 /10

இந்த ஆணையம் தற்காலிகமானது மற்றும் அது உருவாக்கப்பட்ட 18 மாதங்களுக்குள் அதன் பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. முழுமையான அமலாக்கத்திற்கு தாமதம் ஆகலாம் என்றாலும், 8வது ஊதியக்குழுவிற்கான நன்மைகளின் அரியர் தொகை ஜனவரி 2026 முதல் கிடைக்கும்.

6 /10

இந்த கமிஷன் அடிப்படை சம்பளத்தை மட்டும் அதிகரிக்காது. இதனுடன் போனஸ், கிராச்சுவிட்டி, வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), பயண கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்கள் போன்ற அனைத்து சலுகைகளும் மதிப்பாய்வு செய்யப்படும் என TOR இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 /10

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் பணவீக்கத்திற்கு ஏற்ப அதிகரிக்கப்படும். ஓய்வு பெறும்போது பெறப்படும் மொத்த தொகையான கிராஜுவிட்டி ஊழியர்களுக்கு மிக முக்கியமானது. வருடாந்திர செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட போனஸ் தொகையையும் 8வது ஊதியக்குழு மேம்படுத்தக்கூடும். இந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல வித நிதி நன்மைகள் கிடைக்கும். போனஸ், கிராஜுவிட்டி, அலவன்சுகள் என அனைத்திலும் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும்.

8 /10

7வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. இது குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை அளித்தது. 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.8 முதல் 3.0 -க்குள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இன்னும் அதிக சம்பள உயர்வை வழங்கக்கூடும். பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் பணியாளர் தேவைகள் ஆகியவையும் இதில் காரணிகளாக இருப்பதால், சில நிபுணர்கள் 30% அதிகரிப்பை கணித்துள்ளனர்.

9 /10

8வது ஊதியக்குழு தனது பரிந்துரைகளை வழங்கும்போது நாட்டின் பொருளாதார நிலை, நிதி நிலை மற்றும் மாநிலங்களின் நிதி நிலைமை ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகளையும் ஒப்பிட்டு நடைமுறைக்கு ஏற்ற பரிந்துரைகளை வழங்க ஆணையம் ஆராய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 /10

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.