8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு 2 குட் நியூஸ்... ஓய்வூதிய உயர்வு, கம்யூடட் பென்ஷன் விதிகளில் மாற்றம்

Published: Jul 18, 2025, 08:41 AM IST|Updated: Jul 18, 2025, 08:41 AM IST

8th Pay Commission: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி. அவர்களுக்கு 2 நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. ஓய்வூதியம் எக்கச்சக்கமாக உயரவுள்ளது.

8th Pay Commission Pension Hike: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? கம்யூடட் பென்ஷன் விதிகளில் மாற்றம் வருமா? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

8th Pay Commission1/11

8வது ஊதியக் குழு

நாட்டின் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 68 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் நிவாரணம் அளிக்க விரைவில் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரவுள்ளது. இதில் சற்று தாமதம் ஆகலாம் என்றாலும், இதன் அமலாக்கத்திற்கு பிறகு மிகப்பெரிய ஊதிய உயர்வையும் ஓய்வூதிய உயர்வையும் பெறமுடியும்.

Central Government Employees2/11

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு இருக்கும். இது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஓய்வூதியதாரர்களும் மிகப்பெரிய அளவில் நன்மைகளை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களது மாத வருமானமும் மிகப்பெரிய அளவில் உயரவுள்ளது.

Central Government Pensioners3/11

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? கம்யூடட் பென்ஷன் விதிகளில் மாற்றம் வருமா? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

8th CPC Latest News4/11

8வது ஊதியக்குழு

ஓய்வூதியக் கணக்கீடு அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்படுகிறது. வீட்டு வாடகைப் படி (8வது ஊதியக் குழு HRA) மற்றும் பயணப் படி போன்ற கொடுப்பனவுகள் இதில் சேர்க்கப்படுவதில்லை. புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்படும்போது, அடிப்படை சம்பளம் ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்டு, அப்போதைய அகவிலைப்படி பூஜ்ஜியமாக மீட்டமைக்கப்படுகிறது.

Pension5/11

ஓய்வூதியம்

இதன் பொருள் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முதலில் அவர்களின் அடிப்படை ஓய்வூதியம் புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஓய்வூதியம் உருவாக்கப்படும். அதனுடன் அகவிலைப்படி தொகையும் சேர்க்கப்படும்.

Fitment Factor6/11

ஃபிட்மென்ட் ஃபாக்டர்

இந்த முறை ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 க்கு பதிலாக 3.0 அல்லது அதற்கு மேல் நிர்ணயிக்கப்படக்கூடும் என கூறப்படுகின்றது. அப்படி நடந்தால், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காணலாம். ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

Pension Hike7/11

ஓய்வூதிய உயர்வு

மாதம் அடிப்படை ஓய்வூதியமாக ரூ.20,000 பெறும் ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும்? அடிப்படை ஓய்வூதியம் = மாதத்திற்கு ரூ. 20,000, மாதத்திற்கு அகவிலைப்படி தொகை 55% = ரூ. 11,000, மொத்த ஓய்வூதியம் = மாதத்திற்கு ரூ.31 ஆயிரம், 8வது சம்பள ஆணையத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3 ஆக மாறினால், அடிப்படை ஓய்வூதியம் ரூ.60,000 ஆக அதிகரிக்கும். டிஏ பூஜ்ஜியமாக மாறினால், மொத்த உயர்வு மாதத்திற்கு ரூ.29 ஆயிரமாக இருக்கும்.

 

Commuted Pension8/11

கம்யூடட் பென்ஷன்

8வது ஊதியக்குழுவில் மாற்றப்பட்ட ஓய்வூதியம், அதாவது கம்யூடட் பென்ஷன் விதிகளிலும் மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகின்றது. ஒரு மத்திய அரசு ஊழியர் ஓய்வு பெறும்போது, ​​அவர் தனது மாதாந்திர ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மொத்தமாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்ப்பு அவருக்கு அளிக்கப்படுகிறது. இது ஓய்வூதிய மாற்றம் அல்லது கம்யுடேஷன் ஆஃப் பென்ஷன் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு ஈடாக, அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவரது மாதாந்திர ஓய்வூதியத்திலிருந்து எடுக்கப்பட்ட தொகைக்கு ஏற்ப ஓய்வூதியத்திலிருந்து ஒரு தொகை கழிக்கப்படுகின்றது. தற்போது, ​​பிடித்தம் செய்யும் இந்த செயல்முறை 15 ஆண்டுகள் நீடிக்கிறது.

Commutation of Pension9/11

ஓய்வூதிய மாற்றம்

ஓய்வூதிய மீட்பு காலத்தை 15 ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அப்படி செய்தால், ஓய்வு பெற்ற ஊழியர்கள் 3 ஆண்டுகள் முன்னதாகவே தங்கள் முழு ஓய்வூதியத்தையும் பெறத் தொடங்கலாம். இது அவர்களது வயது மூப்பில் மருத்துவம், சமூகப் பொறுப்புகள் மற்றும் குடும்பச் செலவுகளை சிறப்பாகக் கையாள உதவும். 8வது ஊதியக்குழுவில் இந்த மாற்றம் செய்யப்படும் என நம்பப்படுகின்றது.

Arrears10/11

அரியர் தொகை

8வது சம்பளக் குழு ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால் கமிஷனே இன்னும் அமைக்கப்படவில்லை. ஆகையால், 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்தில் தாமதம் ஏற்படலாம். அதாவது, சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் உண்மையான உயர்வு 2026 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2027 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கலாம். எனினும் ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஜனவரி 2026 முதலான அரியர் தொகை கிடைக்கும்.

Disclaimer11/11

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.