8வது சம்பள கமிஷன் முக்கிய மாற்றம்: அடிப்படை ஊதியத்துடன் இணையும் அகவிலைப்படி, எகிறும் சம்பளம்

Published: Oct 24, 2025, 04:20 PM IST|Updated: Oct 24, 2025, 04:20 PM IST

8th Pay Commission DA Merger: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல். அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? இதனால் உதியம் எவ்வளவு அதிகரிக்கும்?

8th Pay Commission Latest News: அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டு அதன் பிறகு புதிய ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் அது பெருக்கப்பட்டும் என நம்பப்படுகின்றது. அப்படி நடந்தால், அது மிகப்பெரிய ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும்.

Central Government Employees1/11

மத்திய அரசு ஊழியர்கள்

இன்னும் சில மாதங்களில் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நிறைவடைந்து 8வது ஊதியக்குழுவின் பரிந்திரைகள் அமலுக்கு வரும். இதற்கான பணிகள் சற்று தாமதமாக நடந்துவருவதால், இதன் அமலாக்கத்திலும் தாமதம் இருக்கும் என நம்பப்படுகின்றது.

8th Pay Commission2/11

8வது ஊதியக்குழு

8வது ஊதியக் குழு குறித்த எதிர்பார்ப்பு மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. புதிய ஊதியக்குழுவில் பல சீர்திருத்தங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவை ஊழியர்களுக்கும், ஒய்வூதியதாரர்களுக்கும் அதிக நன்மைகளை அளிக்கும்.

DA Merger3/11

அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா

8வது ஊதியக்குழுவில், மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் ஒரு முக்கிய சீர்திருத்தம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது - அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுவது. இந்த சீர்திருத்தம் ஊதிய அளவை கணிசமாக உயர்த்தக்கூடும். இது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரார்களின் நிதி நிலையை மேம்படுத்தும்.

Dearness Allowance4/11

அகவிலைப்படி என்றால் என்ன

அகவிலைப்படி என்பது, பணவீக்க அழுத்தங்களை ஈடுசெய்ய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஒரு முக்கியமான அலனன்ஸாகும். தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஆண்டுதோறும் இரண்டு முறை இது திருத்தப்படுகிறது. தற்போது ஜூலை 2025 நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் 58% ஆக உள்ளன. 

Dearness Allowance5/11

அகவிலைப்படி

ஜனவரி 2026 -க்கான அகவிலைப்படி 60.61% ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025 வரையிலான AICPI எண்களின் அடிபடையில் கணக்கிடப்படும். இந்த 6 மாதங்களுக்கான தரவுகள் வந்த பிறகே இதில் தெளிவு கிடைக்கும். எனினும், இது சுமார் 60.61% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

7th Pay Commission6/11

7வது ஊதியக்குழு

வழக்கமாக, அகவிலைப்படி 50% ஐத் தாண்டும்போது, ​​அது அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுகிறது. இந்த நடைமுறை 5வது மற்றும் 6வது ஊதியக் குழுக்களின் போது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், 7வது ஊதியக் குழு இந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றவில்லை. இது பல ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் ஏமாற்றத்தை தந்தது.

Zero Dearness Allowance7/11

பூஜ்ஜியம் ஆகும் அகவிலைப்படி

ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள 8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இதன் பிறகு அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு, மீண்டும் 1%, 2%, 3% என அதிகரிக்கத் தொடங்கும்.

Fitment Factor8/11

ஃபிட்மெண்ட் ஃபாக்டர்

அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டவுடன், இதனுடன் 8வது ஊதியக்குழுவிற்கான ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பெருக்கப்பட்டு, புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும். 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.83 முதல் 2.86 க்குள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Salary Hike9/11

ஊதிய உயர்வு

இந்த மாற்றங்களுக்கு பிறகு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு இருக்கும். இது பணவீக்கத்தால் பிரச்சனையில் இருக்கும் ஊழியர்களுக்கு தேவையான நிவாரணத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Salary Hike10/11

சம்பள உயர்வு

8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன், அப்போது இருக்கும் அகவிலைப்படி அப்படியே அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா, அல்லது, 50% அகவிலைப்படி மட்டும் அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அகவிலைப்படி இணைக்கப்படும் என்றும் கணிக்கப்பட்டாலும், இது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிபடுத்தல் இன்னும் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை.

Disclaimer11/11

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.