8வது ஊதியக்குழு: அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆகும், ஊதியம், ஓய்வூதியம் அதிரடியாய் உயரும்

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. அவர்களது அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படும். அதன் தாக்கம் ஊதியத்தில் எப்படி இருக்கும்? அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

8th Pay Commission Latest News: 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு அகவிலைப்படி தொகை அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அகவிலைப்படி 50% அல்லது அதற்கு மேல் இருந்தால், அதை புதிய ஊதியக் குழுவில் இணைக்க வேண்டும் என்ற ஒரு விதி உள்ளது. நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையில் அகவிலைப்படி (DA) கணக்கிடப்படுகிறது. CPI -இல் ஏற்படும் மாற்றம் அகவிலைப்படியிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

1 /14

மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இது ஜனவரி 1, 2026 முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். புதிய ஊதியக் குழு ஏப்ரல் மாதம் முதல் தனது பணியைத் தொடங்கும்.

2 /14

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில் மிகப்பெரிய திருத்தம் செய்யப்படும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. இது 8வது ஊதியக் குழுவின் பரிந்திரைகளின் அடிப்படையில் செய்யப்படும். ஆனால், 8வது சம்பளக் குழுவின் மிகப்பெரிய தாக்கம் அகவிலைப்படியில் இருக்கும்.

3 /14

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி பூஜ்ஜியமாக (0) மாற்றப்படும். அதாவது புதிய சம்பள ஆணையம் செயல்படுத்தப்பட்டவுடன், அகவிலைப்படி கணக்கீடு மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கும். ஜனவரி 2026க்குள், அகவிலைப்படி (DA) 61 சதவீதத்தை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. விதிகளின்படி, புதிய சம்பளக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்போது, ​​ஊழியர்களின் அகவிலைப்படி பூஜ்ஜியமாக (0) மாற்றப்பட்டு அகவிலைப்படி தொகை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுகிறது.

4 /14

8வது ஊதியக்குழுவிலும் அதே போல் நடக்கும். இருப்பினும், அகவிலைப்படியில் 50 சதவீதம் மட்டுமே அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்படும் என்றும் சிலர் கூறுகிறார்கள். இதற்கு மேல் உள்ள 11 சதவீதம் இணைக்கப்படாது. இருப்பினும், இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அரசாங்கமும் இதை பற்றி எதையும் இன்னும் உறுதியாக தெரிவிக்கவில்லை. இவை அனைத்தும் புதிய ஆணையத்தின் பரிந்துரைகளைப் பொறுத்தது.

5 /14

8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் புதிய அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி கணக்கிடப்படும். இது 0 இலிருந்து தொடங்கப்படும். ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.34200 என்று வைத்துக்கொள்வோம், அப்போது ஜனவரி 2026 முதல் அவரது அகவிலைப்படி 0 ஆக இருக்கும். பின்னர் ஜூலை 2026 இல், 3-4 சதவீதம் டிஏ (அவவிலைப்படி எவ்வளவு கணக்கிடப்படுகிறதோ) அதனுடன் சேர்க்கப்படும். அதன் பிறகு, மேலும் கணக்கீடுகள் தொடரும். அகவிலைப்படி பூஜ்ஜியமாக மாறினால், அது மற்ற கொடுப்பனவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

6 /14

8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அகவிலைப்படி 50% அல்லது அதற்கு மேல் இருந்தால், அதை புதிய ஊதியக் குழுவில் இணைக்க ஒரு ஏற்பாடு உள்ளது. நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையில் அகவிலைப்படி (DA) கணக்கிடப்படுகிறது. CPI அவ்வப்போது மாறுகிறது, இது டிஏ -விலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

7 /14

8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, தற்போதைய அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்பட்டு, ஊழியர்களின் மொத்த சம்பளம் அதிகரிக்கும். தற்போதைய சூழ்நிலையில், ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 மற்றும் அகவிலைப்படி 50% எனில், அகவிலைப்படி ரூ.9,000 ஆக இருக்கும் என்று வைத்துக்கொள்வோம். 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி தொகை சேர்க்கப்பட்டால் மொத்த சம்பளம் ரூ.27,000 ஆக உயரும்.

8 /14

புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படும் போதெல்லாம், ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். விதிகளின்படி, ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை முழுமையாக அடிப்படை சம்பளத்தில் சேர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், அப்படி நடக்க நிதி நிலைமை தடையாக இருக்கும். இருப்பினும், இது 2016 ஆம் ஆண்டில் செய்யப்பட்டது.

9 /14

அகவிலைப்படி எப்போது பூஜ்ஜியமாக மாறும்? சம்பளக் குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு, ஜனவரி 2026 முதல் அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்படும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டு, அகவிலை கணக்கீடு மீண்டும் 1%, 2% என தொடங்கும். அதாவது, ஜனவரி முதல் ஜூன் 2026 வரையிலான AICPI குறியீட்டின் அடிப்படையில் புதிய அகவிலைப்படி தீர்மானிக்கப்படும். 

10 /14

7வது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனால், சராசரியாக 23.55 சதவீதம் சம்பள உயர்வு ஏற்பட்டது.

11 /14

8வது சம்பளக் குழுவிற்கான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.28 முதல் 2.86 -க்குள் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 40 முதல் 50 சதவீதம் வரை சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

12 /14

ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இலிருந்து தோராயமாக ரூ.51,480 ஆக அதிகரிக்கும். இது மிகப்பெரிய சம்பள உயர்வாக இருக்கும். இதன் அடிப்படையில் பிற அலவன்சுகளிலும் ஏற்றம் ஏற்படும்.

13 /14

ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய அதிகரிப்பை காண்பார்கள். அவர்களது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 -இலிருந்து ரூ.25,740 ஆக அதிகரிக்கும்.

14 /14

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.