8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வரும்? இதற்கான டைம்லைன் என்ன? முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Implementation: ஜனவரி 2025 -இல் மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை உருவாக்குவதாக அறிவித்தது. ஆனால் அதற்கான பணிகள் மந்தமாகவே நடக்கின்றன. அரசு இன்னும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது ஆணையத்திற்குத் தலைமை தாங்க ஒரு தலைவரை நியமிக்கவோ இல்லை. மேலும், விதிகள் மற்றும் நடைமுறைகளும் முறைப்படுத்தப்படவில்லை.
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நாளுக்கு நாள் இது குறித்து ஒரு புதிய அப்டேட் வந்த வண்னம் உள்ளது. 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் குறிப்பிடத்தக்க சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.
8வது ஊதியக் குழு நடைமுறைக்கு வரும்போது ஊதியம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய கணக்கீட்டில் ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஈடுபட்டுள்ளனர். இதற்கான டைம்லைனை அறியும் ஆவலும் பலருக்கும் உள்ளது.
குறிப்பாக, இந்த ஆண்டு ஜனவரியில், மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை உருவாக்குவதாக அறிவித்தது. ஆனால் அரசு இன்னும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது ஆணையத்திற்குத் தலைமை தாங்க ஒரு தலைவரை நியமிக்கவோ இல்லை. மேலும், விதிகள் மற்றும் நடைமுறைகளும் முறைப்படுத்தப்படவில்லை.
10 ஆண்டு விதிப்படி, 8வது ஊதியக்குழு ஜனவரி 2026 -இல் அமலுக்கு வர வேண்டும். ஆனால், இதில் ஏகப்பட்ட தாமதம் ஏற்பட்டுள்ளதால், அது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது.
முந்தைய ஊதியக் குழுக்களின் செயலாக்கத்தைப் பார்த்தால், ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த அரசாங்கம் வழக்கமாக சுமார் 18 முதல் 24 மாதங்களை எடுத்துக்கொள்கிறது. இதனால், 8வது ஊதியக் குழு 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு முன்னர் செயல்படுத்தப்படுவது சாத்தியமில்லை. 8வது ஊதியக்குழுவின் அமலாக்கம் 2028 ஆம் ஆண்டின் முற்பகுதிக்கு தள்ளிப்போடப்படலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தற்போது, 7வது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறையில் உள்ளன. டிசம்பர் 2025 வரை அவை அமலில் இருக்கும். ஜூலை மாதம், 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக, மாநிலங்கள், பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருவதாக நிதி அமைச்சகம் கூறியிருந்தது.
சம்பள உயர்வைக் கண்டறிவதற்கான திறவுகோலான ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. மதிப்பீடுகளின் அடிப்படையில், 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 - 2.86 ஆக இருக்கும் என கூறப்படுகின்றது. எனினும், இது 1.92 ஆகவே இருக்க அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
1.92 ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில், லெவல் 6 மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய அடிப்படை ஊதியம் ரூ.67,968 ஆக இருக்கும். (தற்போதைய அடிப்படை ஊதியம் ரூ.35,400 x 1.92 = ரூ.67,968). இதில் பல்வேறு கொடுப்பனவுகள் சேர்க்கப்படும். இது இந்த ஊதிய அளவிற்கான நிகர மாதாந்திர சம்பளமாக இருக்கும்.
8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும் என்பது உண்மை என்றாலும், இதன் அமலாக்கத்தில் ஏற்படும் தாமதம் ஊழியர்களிடையே குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.