8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு DA, HRA மற்றும் TA உட்பட பல வித அலவன்சுகளில் உயர்வு இருக்கும். பணிக்கொடையும் 3 மடங்காக உயரக்கூடும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission: ஃபிட்மென்ட் ஃபாக்டர் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையில்தான் ஊதிய உயர்வும் ஓய்வூதிய உயர்வும் தீர்மான்னிக்கப்படும். இந்த முறை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக தீர்மானிக்கப்படும் என ஊகிக்கப்படுகின்றது. இந்த மாத முடிவிற்குள் 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் தெளிவாகும். 2026 ஆம் ஆண்டு மத்தியில் அல்லது 2027 ஜனவரி முதல் புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. ஆனால், இதன் நன்மைகளுக்கான நிலுவைத் தொகை ஜனவரி 2026 முதல் வழங்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக மத்திய அரசு ஜனவரி மாதம் 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும். ஊதியம் மட்டுமல்லாமல் அதைத் தாண்டியும் ஊழியர்களுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA, HRA மற்றும் TA உட்பட பல வித அலவன்சுகளில் உயர்வு இருக்கும். பணிக்கொடையும் 3 மடங்காக உயரக்கூடும் என கூறப்படுகின்றது.
சந்தை போக்கு, நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கம், பிற பொருளாதார காரணிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 8வது ஊதியக் குழு அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிக்கும். இது சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும்.
7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்கான காலம் முடியவுள்ள நிலையில், அடுத்த ஊதியக்குழுக்கான பணிகள் தொடங்கியுள்ளதால் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதிய சம்பளக் குழு அமைக்கப்பட்டவுடன் அதிகபட்ச கிராஜுவிட்டி தொகை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய அதிகபட்ச கிராஜுவிட்டி 20 லட்சமாக இருந்தாலும், புதிய சம்பளக் குழு அமைக்கப்பட்ட பிறகு அது 25 அல்லது 30 லட்சத்தை எட்டக்கூடும். உதாரணமாக, நீங்கள் 30 ஆண்டுகள் ரூ.18,000 சம்பளத்துடன் பணியாற்றியிருந்தால், கிராஜுவிட்டி ரூ.4.89 லட்சமாக இருக்கும். புதிய சம்பளக் குழுவிற்குப் பிறகு, அது ரூ.12.56 லட்சமாக உயரலாம்.
6 தற்போது, 7வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. இதன் அடிப்படையில் தற்போது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.51,000 ஆக உயர வாய்ப்புள்ளது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையில்தான் ஊதிய உயர்வும் ஓய்வூதிய உயர்வும் தீர்மான்னிக்கப்படும். இந்த முறை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக தீர்மானிக்கப்படும் என ஊகிக்கப்படுகின்றது.
8வது ஊதியக்குழு அமைக்கப்படுவதால் குறைந்தபட்ச ஊதியத்தில் ஏற்படும் அதிகரிப்பை தவிர ஊழியர்களுக்கு இன்னும் பல வித நல்ல செய்திகளும் காத்திருக்கின்றன. சம்பளம் 25% முதல் 35% வரை அதிகரிப்பது போல, DA, HRA, TA போன்றவையும் அதிகரிக்கும்.
ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய சலுகைகள் 30% அதிகரிக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. இது தவிர கிராஜுவிட்டியிலும் ஏற்படக்கூடும் ஏற்றம் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும்.
தற்போது ஓய்வூதியதாரர்கள் பெற்றுவரும் குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.9,000 ஆக உள்ளது. அரசு ஊழியர்களின் அதிகபட்ச ஓய்வூதியம் அடிப்படை சம்பளத்தில் 50% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.1,25,000 ஆகும். 8வது சம்பளக் குழுவில் இது ரூ.3 லட்சமாக உயர வாய்ப்புள்ளது.
இந்த மாத முடிவிற்குள் 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் தெளிவாகும். 2026 ஆம் ஆண்டு மத்தியில் அல்லது 2027 ஜனவரி முதல் புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. ஆனால், இதன் நன்மைகளுக்கான நிலுவைத் தொகை ஜனவரி 2026 முதல் வழங்கப்படும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.