8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் என்னென்ன முக்கிய மாற்றங்கள் ஏற்படும்? ஊழியர்கல், ஓய்வூதியதாரர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? முக்கிய விவரங்களை இங்கே காணலாம்.
8th Pay Commission Implementation: வரும் வாரங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல பெரிய அறிவிப்புகள் காத்திருக்கின்றன. 8வது ஊதியக்குழு தொடர்பான பல அப்டேட்கள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1/10மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளக் கட்டமைப்பை மேம்படுத்துவதும், தற்போதைய பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப அதை மாற்றுவதும் 8வது ஊதியக்குழுவின் முக்கிய நோக்கமாகும். இது சம்பளக் கட்டமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், தற்போதைய பணவீக்க விகிதம் மற்றும் பொருளாதார போக்குகளுக்கு ஏற்ப இழப்பீடு வழங்கவும் வாய்ப்புள்ளது.
2/108வது ஊதியக் குழுவின் கீழ், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ₹34,500 இலிருந்து ₹41,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இது தற்போதைய பொருளாதார நிலைமைகளை மனதில் கொண்டு முன்மொழியப்பட்டுள்ளது. 2014 இல் அமைக்கப்பட்டு ஜனவரி 2016 இல் செயல்படுத்தப்பட்ட 7வது ஊதியக் குழு, குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை மாதத்திற்கு ₹7,000 இலிருந்து ₹18,000 ஆக உயர்த்தியது.
3/108வது உதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 - 3,00 -க்குள் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. 7வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அந்த நிலையில், குறைந்தபட்ச சம்பளமான ரூ.18,000 வாங்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?
4/10தற்போதைய பணவீக்க விகிதம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அகவிலைப்படி (டிஏ), வீட்டு வாடகை கொடுப்பனவு (எச்ஆர்ஏ) மற்றும் பயண கொடுப்பனவு (டிஏ) ஆகியவை திருத்தப்படும். இது ஊழியர்களுக்கு நிதி நிவாரணத்தை வழங்கும்.
5/108வது ஊதியக்குழுவில் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கு ஏற்ப குறைந்தபட்ச ஓய்வூதியம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது, மேலும் புதிய ஊதிய மேட்ரிக்ஸின் படி தானியங்கி சரிசெய்தல் மற்றும் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதற்கான வலுவான அமைப்பு முன்மொழியப்பட்டுள்ளது.
6/10மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை ஒரே நேரத்தில் மொத்தமாக எடுக்கும் வசதி அளிக்கப்படுகின்றது. இதற்கு ஈடாக ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்திலிருந்து கழிக்கப்படுகின்றது. அது கம்யுடேஷன் ஆஃப் பென்ஷன் என அழைக்கப்படுகின்றது. இதற்கான கால அளவை தற்போதுள்ள 15 ஆண்டுகளிலிருந்து 12 ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அது 8வது ஊதியக்குழுவில் நடக்கும் என கூறப்படுகின்றது.
7/10தற்போது மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் நிதி பாதுகாப்பை அளிக்க, 80 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் அளிக்கப்படுகின்றது. கூடுதல் ஓய்வூதியம் கிடைக்கும் தொடக்க வயதை 65 ஆக குறைக்க வேண்டும் என்றும் இது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 5% அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை உள்ளது. இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
8/108வது ஊதியக்குழுவில், CGHS -க்கு பதிலாக காப்பீட்டு அடிப்படையிலான மற்றொரு திட்டம் கொண்டுவரப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. CGHS -க்கு பதிலாக புதிய காப்பீட்டு அடிப்படையிலான திட்டத்தை (CGEPHIS) அறிமுகம் செய்வது குறித்து வலுவான விவாதம் நடந்து வருகிறது.
9/108வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வந்தாலும், ஜனவரி 2026 முதல் அதன் நன்மைகளுக்கான அரியர் தொகை கிடைக்கும் என கூறப்படுகின்றது. இதனால் 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மொத்தமாக பெரிய தொகை கிடைக்கும்.
10/10பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.