8வது ஊதியக்குழு: ரூ.40,000 டு ரூ.1 லட்சம்....ஓய்வூதியதாரர்களுக்கு அசத்தலான ஓய்வூதிய உயர்வு

Published: Apr 19, 2025, 02:02 PM IST|Updated: Apr 19, 2025, 02:02 PM IST

8th Pay Commission: 8வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வரும்? இது அமலுக்கு வந்தவுடன் ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

8th Pay Commission: 8வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வரும்? இது அமலுக்கு வந்தவுடன் ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

Central Government Employees1/10

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி மாதம் மத்திய அரசு மிகப்பெரிய நல்ல செய்தியை அளித்தது. ஜனவரியில் 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

8th Pay Commission2/10

8வது ஊதியக் குழு

8வது ஊதியக்குழு பற்றிய அறிவிப்பு வந்தது முதல் ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு குறித்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 8வது ஊதியக்குழு இன்னும் அமைக்கப்படவில்லை. இந்த மாத இறுதிக்குள் இது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Pensioners3/10

ஓய்வூதியதாரர்கள்

மத்திய அரசு ஊழியர்களைப் போலவே, ஓய்வூதியதாரர்களும் 8வது சம்பளக் குழுவை அமல்படுத்துவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆணையம் பரிந்துரைக்கும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில், ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதிய ஏற்றம் இருக்கும்.

 

Salary Hike4/10

சம்பள உயர்வு

பொதுவாக 8வது ஊதியக்குழு பற்றி பேசும்போதெல்லாம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்துதான் அதிகம் பேசப்படுகின்றது. ஆனால், ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும்.

Monthly Pension5/10

மாத ஓய்வூதியம்

8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். மாதம் 40 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர் எவ்வளவு ஓய்வூதிய உயர்வை எதிர்பார்க்கலாம் என்று இந்த பதிவில் காணலாம்.

Fitment Factor6/10

ஃபிட்மெண்ட் ஃபாக்டர்

ஒரு ஓய்வூதியதாரரின் மாத ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.40,000 என்றும், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்படுகிறது என்றும் வைத்துக்கொள்ளலாம். அந்த நிலையில், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் சுமார் ரூ.76,000 ஆக அதிகரிகும்.

Pension Hike7/10

ஓய்வூதிய உயர்வு

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.08 ஆக இருந்தால், ஓய்வூதியதாரர்களின் சம்பளம் சுமார் ரூ.83,000 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டால், ஓய்வூதியம் 1 லட்சத்தைத் தாண்டும். அதாவது, தற்போது ஒரு ஓய்வூதியதாரர் 40 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார் என்றால், 8வது சம்பளக் குழுவில் ஓய்வூதியம் 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Central Government Employees8/10

மத்திய அரசு ஊழியர்கள்

இந்த ஊதிய திருத்தம் வெறும் நிதி நிலையில் மாற்றங்கள் பற்றியது மட்டுமல்ல. இது அரசு பணிகளில் பணியாற்றி ஆதரிக்கும் பணியாளர்களுக்கான மரியாதை, நிலைத்தன்மை மற்றும் பாராட்டு பற்றியது. ஓய்வு பெற்றவர்களுக்கு, இது அவர்களின் வயதான காலத்திற்கான பாதுகாப்பைக் குறிக்கிறது. தற்போதுள்ள ஊழியர்களுக்கு, இது சிறந்த வாழ்க்கை முறையையும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளிலிருந்து நிவாரணத்தையும் உறுதியளிக்கிறது.

8th Pay Commission9/10

8வது ஊதியக்குழு

லெவல் 6 இல் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் போன்ற மத்திய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் குறைந்தபட்ச சம்பளம் சுமார் ரூ.35400 ஆக உள்ளது. 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்டவுடன், ஊழியர்களின் சம்பளம் ரூ.101244 ஆக உயரலாம். அதாவது, சம்பளத்தில் சுமார் 2.5 மடங்கு அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Disclaimer10/10

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகின்றது.