8th Pay Commission: 8வது ஊதியக் குழுவில் அதிகபட்ச பலனை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என கூறப்படுகின்றது. இது ஊதியக்குழு நிர்ணயிக்கும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பெரிதும் சார்ந்திருக்கும்.
8th Pay Commission Pension Hike: எட்டாவது சம்பளக் குழுவின் குறிப்பு விதிமுறைகளை (TOR) இறுதி செய்யும் செயல்முறையை மத்திய அரசு விரைவுபடுத்தியுள்ளது. TOR (குறிப்பு விதிமுறைகள்) அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் அறிவிக்கப்படும் என்றும், அதனுடன் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்களும் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், மோடி அமைச்சரவை 8வது ஊதியக் குழுவை உருவாக்க ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் இந்த முடிவிற்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய அதிகரிப்புக்கான வழி திறக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அமல்படுத்தப்படுகின்றன. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 2025 டிசம்பரில் நிறைவுபெறும் நிலையில், 8வது ஊதியக்குழு 2026 ஜனவரி முதல் அமலுக்கு வர வேண்டும். எனினும், இன்னும் குழுவே அமைக்கப்படவில்லை என்பதால் இதன் அமலாக்கத்தில் சற்று தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகின்றது. எனினும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 2026 முதலான அரியர் தொகை கிடைக்கும்.
8வது ஊதியக் குழுவில் அதிகபட்ச பலனை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என கூறப்படுகின்றது. இது ஊதியக்குழு நிர்ணயிக்கும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பெரிதும் சார்ந்திருக்கும்.
8வது ஊதியக் குழுவில் 1.92 முதல் 2.86 -க்குள்ளான வரம்பில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை அரசாங்கம் அங்கீகரித்தால், ஓய்வூதியத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும். ஓய்வூதிய உயர்வுக்கான மதிப்பீடுகளை இந்த பதிவில் காணலாம்.
கிரேட் பே 2000 சம்பளத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் தற்போதைய ஓய்வூதியம் மாதம் ரூ.13,000 ஆக உள்ளது. ஃபிட்மெண்ட் பாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், இது மாதம் ரூ.24,960 ஆக அதிகரிக்கும்.
ஃபிட்மெண்ட் பாக்டர் 2.08 ஆக நிர்ணயிக்கப்பட்டால், கிரேட் பே 2000 சம்பள ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியம் ரூ.27,040 ஆக உயரும்.
ஃபிட்மெண்ட் பாக்டர் 2.28 ஆக நிர்ணயிக்கப்பட்டால், கிரேட் பே 2000 சம்பள ஓய்வூதியதாரர்களின் மாத ஓய்வூதியம் ரூ.29,640 ஆக ஏற்றம் பெறும்.
ஒரு ஓய்வூதியதாரர் அடிப்படை ஓய்வூதியமாக ரூ.30,000 பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். 1.92, 2.08, 2.28 அல்லது 2.57 ஆக ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்பட்டால், தித்தப்பட்ட ஓய்வூதியம் என்னவாக இருக்கும் என காணலாம். 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.57,600 / 2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.62,400 / 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.68,400 / 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.77,100
எட்டாவது சம்பளக் குழுவின் குறிப்பு விதிமுறைகளை (TOR) இறுதி செய்யும் செயல்முறையை மத்திய அரசு விரைவுபடுத்தியுள்ளது. TOR (குறிப்பு விதிமுறைகள்) அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் அறிவிக்கப்படும் என்றும், அதனுடன் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்களும் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆணையம் தனது அறிக்கையைத் தயாரிக்க குறைந்தபட்சம் ஒரு வருட அவகாசம் வழங்கப்படலாம். குழு அறிக்கையை 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கலாம். இருப்பினும், ஜனவரி 1, 2026 முதல் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் ஏற்படும் அதிகரிப்புக்கான நிலுவைத் தொகை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.