8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய NC-JCM கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 8வது ஊதியக்குழு ToR -இல் மாற்றங்கள் வருமா? முக்கிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission ToR: கூட்டு ஆலோசனை அமைப்பின் தேசிய கவுன்சிலின் (NC JCM) நிலைக்குழு உறுப்பினர்கள், 8வது மத்திய ஊதியக் குழுவை பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க பரிந்துரைத்துள்ளனர். இன்னும் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பாட்டுள்ளன. அவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
1/10மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. கடந்த சனிக்கிழமை, கூட்டு ஆலோசனை அமைப்பின் தேசிய கவுன்சிலின் ஒரு முக்கிய கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட சில முக்கியமான முடிவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
2/10கூட்டு ஆலோசனை அமைப்பின் தேசிய கவுன்சிலின் (NC JCM) நிலைக்குழு உறுப்பினர்கள், 8வது மத்திய ஊதியக் குழுவை பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க பரிந்துரைத்துள்ளனர். அதே போல் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியத்தை திருத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3/10அரசாங்கத்திற்கும் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் தலைமையில் JCM இயங்குகிறது. இந்த அமைப்பு அரசாங்கத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுகிறது. ToR (f)(iii) -இல் உள்ள "பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டத்தின் நிதியில்லாத செலவை" என்ற அம்சத்தை ஐ நீக்க JCM பரிந்துரைத்துள்ளது.
4/10நவம்பர் 15 அன்று புது தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் JCM இன் செயலாளர் ஊழியர்கள் மற்றும் தலைமை ஊழியர்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும், டிசம்பர் 15, 2025 க்குள் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு அனைத்து தொகுதி அமைப்புகளிடமிருந்தும் குழு பரிந்துரைகளை கோரியுள்ளது.
5/10"வரைவுக் குழு அனைத்து அறிக்கைகளையும் ஆய்வு செய்து, பின்னர் பணியாளர் தரப்பு குறிப்பாணையை இறுதி செய்வதற்காக அதன் கருத்துக்களை உருவாக்க வேண்டும்," என்று நவம்பர் 17, 2025 அன்று வெளியிடப்பட்ட தேசிய கவுன்சில், JCM இன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பேடு தயாரிப்பதற்காக, குழு முக்கியமாக 30-புள்ளி நிகழ்ச்சி நிரல்களில் பரிந்துரைகளை கோரியுள்ளது. பின்னர் அதை தேசிய கவுன்சிலின் ஊழியர்கள் தரப்பு 8வது ஊதியக்குழுவிடம் சமர்ப்பிக்கும்.
6/10குறிப்பேடு தயாரிப்பதற்கான முக்கிய அம்சங்களில் சில: குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், தற்போதுள்ள ஊழியர்களுக்கான ஃபிட்மெண்ட் ஃபாக்டர், அதிகபட்ச சம்பளம், பதவி உயர்வுக்கான ஊதியம் மற்றும் MACP ஆகியவற்றை நிர்ணயித்தல், ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அமலாகக் தேதி, வெவ்வேறு பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு ஊதிய திருத்தம், அலவன்சுகள், முன்பணம், போனஸ், HRA உள்ளிட்ட வீட்டு வசதிகள், மத்திய அரசு ஊழியர் குழு காப்பீட்டுத் திட்டம், அனைத்து விடுப்புகள் தொடர்பான பிரச்சினைகள், இடமாற்றக் கொள்கை ஒப்பந்தம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டமைத்தல், 01/01/2026 க்கு முந்தைய அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியத் திருத்தம் மற்றும் ஓய்வூதிய திருத்தம், பணிக்கொடை போன்றவை உள்ளிட்ட தொடர்புடைய விஷயங்கள்.
7/10நிலைக்குழு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க விரும்புவது ஏன்? நவம்பர் 4 அன்று, 8வது ஊதியக்குழு ToR-ஐ அறிவித்த போது, பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டங்களின் நிதியில்லாத செலவில் மாற்றங்களைச் செய்யுமாறு மையம் தெரிவித்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீட்டெடுக்கக் கோரி பல அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஊழியர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டியதில்லை.
8/10இதேபோன்ற கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தி, தேசிய கவுன்சில் - JCM "பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டத்தின் நிதியில்லாத செலவை" கையாளும் ToR (f)(iii) ஐ நீக்க பரிந்துரைத்துள்ளது. நவம்பர் 3, 2025 அன்று ஒரு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் 8வது மத்திய ஊதிய ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. 8வது ஊதியக்குழு உருவாக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குப் பிறகு அதன் பரிந்துரைகளை வழங்கும். மூன்று பேர் கொண்ட ஆணையத்திற்கு அதன் தலைவரும், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமை தாங்குகிறார்.
9/10ToR -இன் முரண்பாடுகளை பற்றி கலந்தாலோசித்த கூட்டு ஆலோசனை அமைப்பின் தேசிய கவுன்சிலின் ஊழியர்களின் கூட்டம், இது குறித்த சில தீர்க்கமான முடிவுகளை எடுத்துள்ளது. 8வது ஊதியக்குழுவிற்கும் அரசாங்கத்திற்கும் இந்த குழு அளிக்கபோகும் பரிந்துரைகள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நன்மை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
10/10பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.