8வது ஊதியக்குழு: இந்த அரசு ஊழியர்களுக்கு ஷாக் தந்த மத்திய அரசு

Written ByVijaya Lakshmi
Published: Mar 24, 2025, 09:38 PM IST|Updated: Mar 24, 2025, 09:38 PM IST

8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக் குழுவில், சம்பள உயர்வு, ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் கொடுப்பனவுகளின் அடிப்படையில் இருக்கும். அறிக்கைகளின்படி, 8வது சம்பளக் குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பொதுவாக பத்து வருடத்திற்கு ஒருமுறை ஊழியர்களின் சம்பள உயர்வை அரசாங்கம் முடிவு செய்து வருகிறது. நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் போதெல்லாம் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கின்றன, இதனுடன் அரசாங்கம் சம்பளத்தையும் அதிகரிக்கிறது. அந்தவகையில் தற்போது அரசு ஊழியர்கள் எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

8th Pay Commissiom1/7

8வது சம்பளக் குழு

8வது சம்பளக் குழுவை மத்திய அரசு அங்கீகரித்ததிலிருந்து, அரசு ஊழியர்கள் மத்தியில் தற்போது மகிழ்ச்சி அலை வீசி வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் தங்களின் சம்பளம் அதிகரிக்கும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.

 

Salary Hike2/7

சம்பளம் அதிகரிப்பு

8வது சம்பளக் குழுவின் கீழ் சில துறைகள் உள்ளன. அந்த துறைகளுக்கு சம்பளம் அதிகரிக்காது. அந்த துறைகள் பற்றி பார்ப்போம். 

 

7th Pay Commission 3/7

7வது சம்பள கமிஷன்

தற்போது நாட்டில் 7வது சம்பள கமிஷன் அமலில் உள்ளது. இந்த ஊதியக் குழு 2014 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு செயலுக்கு வந்தது. 

 

Salary Commission4/7

சம்பள ஆணையம்

பொதுவாக இந்தியாவில் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு புதிய சம்பள ஆணையம் அமைக்கப்படும், அந்தவகையில் நாட்டின் முதல் சம்பள ஆணையம் 1946 இல் அமைக்கப்பட்டது. 

 

Employees and Salary Committee5/7

ஊழியர்களும் சம்பளக் குழு

பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) அல்லது ஏதேனும் தன்னாட்சி அமைப்பின் ஊழியர்களாகவோ அல்லது உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவோ இருக்கும் அனைத்து ஊழியர்களும் சம்பளக் குழுவில் அடங்க மாட்டார்கள். இவர்கள் வேறு விதியின் கீழ் வருவார்கள். 

 

Fitment Factor6/7

ஃபிட்மென்ட் ஃபாக்டர்

8வது ஊதியக் குழுவில், சம்பள உயர்வு, ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் கொடுப்பனவுகளின் அடிப்படையில் இருக்கும். அறிக்கைகளின்படி, 8வது சம்பளக் குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 த்திலிருந்து நேரடியாக ரூ.51,000 ஆக உயரும். 

 

8th Pay Commission Salary7/7

8வது சம்பளக் குழு

இதனிடையே தற்போது ​​8வது சம்பளக் குழுவின் படி, ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை, ஆனால் மதிப்பீடுகள் 1.92, 2.08, 2.28, மற்றும் 2.57 அல்லது 2.86 ஆகும்.