8th Pay Commission Implementation: 8வது ஊதியக்குழு தனது பணியை தொடங்கிவிட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு உள்ள டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்கான பணிகள் வேகமான நடந்து வருகின்றன. இதன் அமலாக்கத்தில் சற்று தாமதம் ஆகலாம் என்றாலு இதன் நன்மைகளுக்கான அரியர் தொகை ஜனவரி 2026 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும். 8வது ஊதியக்குழுவிடமிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள் என்ன? ஃபிட்மெண்ட் ஃபாக்டர், சம்பள உயர்வு, ஓய்வூதிய உயர்வு, அகவிலைப்படி, லெவல் இணைப்பு ஆகிய முக்கிய 5 எதிர்பார்ப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
8வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை சீரமைப்பதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது. இந்த ஆணையம் 7வது சம்பளக் குழுவைப் பின்பற்றி ஒரு புதிய ஊதிய அமைப்பு மற்றும் ஓய்வூதிய முறையை நிறுவும். அதன் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படும். இதன் அமலாக்கத்தில் தாமதம் ஏற்பட்டாலும், ஜனவரி 1, 2026 முதல் அரியர் தொகை கிடைக்கும்.
இந்த ஆணையத்தின் சிறப்பு என்னவென்றால், இது தற்போதைய பணவீக்கம் மற்றும் செலவுகளுக்கு ஏற்ப ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகள், ஓய்வூதியங்கள் மற்றும் பிற சலுகைகளை புதுப்பிக்கிறது. இது அரசு ஊழியர்களின் வருமானத்தை அதிகரிக்கும். இதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரம் மேம்படும். சமீபத்தில் தன் பணிகளை தொடங்கியுள்ள 8வது ஊதியக்குழுவிடம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உள்ள டாப் 5 எதிர்பார்ப்புகள் பற்றி இங்கே காணலாம்.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்பது புதிய ஊதியக்குழுவில் புதிய அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க பயன்படுத்தப்படும் முக்கிய காரணியாகும். தற்போதுள்ள அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டருடன் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுகின்றது. இது புதிய விகிதங்களின்படி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை தீர்மானிக்கிறது.
7வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. 8வது ஊதியக் குழுவில், இது 2.28 முதல் 3.0 -க்குள் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது ₹18,000 ஆக இருக்கும் குறைந்தபட்ச சம்பளம் ₹41,000 முதல் ₹54,000 வரை அதிகரிக்கலாம். அதாவது 34% முதல் 186% வரையிலான சம்பள உயர்வு இருக்கும். மத்திய அரசு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை தற்போதுள்ள 2.57 -ஐ விட அதிகமாக நிர்ணயிக்க வேண்டும் என ஊழியர்கள் விரும்புகிறார்கள்.
8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பொறுத்து மாத சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 - 3.00 -க்குள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. அந்த நிலையில், குறைந்தபட்ச சம்பளமான ரூ.18,000 வாங்கும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.34,560, 2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.37,440, 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.41,040, 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.46,260, 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.51,480, 3.00 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.54,000. அதிகபட்ச ஊதிய உயர்வுக்கான எதிர்பார்ப்பு அரசு ஊழியர்களிடையே உள்ளது.
ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பொறுத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்திலும் நல்ல ஏற்றம் இருக்கும். ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹9,000 லிருந்து தோராயமாக ₹20,500 ஆக அதிகரிக்கலாம். இது ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும். இது தவிர கம்யுடேஷன் பென்ஷன், கூடுதல் ஓய்வூதியம், CGHS ஆகியவற்றிலும் ஓய்வூதியதாரர்கள் மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள்.
அகவிலைப்படி அதாவது DA அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும் என்ற நம்பிக்கை ஊழியர்களுக்கு இருந்தது. ஆனால், அதை அரசாங்கம் மறுத்துவிட்டது. அடுத்து ஊழியர்கள், அகவிலைப்படி கணக்கீட்டில் ஏதாவது மாற்றம் செய்யப்படுமா, அடிப்படை ஆண்டு மாறுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். முன்பு போலவே, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலைப்படி நிவாரணம் (DR) திருத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர் அமைப்பான தேசிய கூட்டு ஆலோசனை இயந்திர கவுன்சில், லெவல் 1 முதல் லெவல் 6 வரை உள்ள ஊழியர்களின் நிலைகளை இணைக்க (நிலை 1 உடன் நிலை 2, நிலை 3 உடன் நிலை 4, நிலை 5 உடன் நிலை 6) பரிந்துரைத்துள்ளது. இது மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதும். ஆனால் இதை பற்றி அரசாங்கம் இன்னும் எந்த வித உறுதியையும் அளிக்கவில்லை. ToR-இலும் இது இடம்பெறவில்லை.
8வது ஊதியக்குழு அமலாக்கத்திற்குப் பிறகு பல நன்மைகளை எதிர்பார்க்கலாம்: ஊழியர்களின் நிதி நிலை வலுப்படுத்தப்படும், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் அதிகரித்து பணி ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பு அதிகரிக்கும், பணவீக்கத்தின் தாக்கம் குறையும், அரசு சேவைகளில் ஊழியர்களின் மன உறுதி அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.