8வது ஊதியக்குழு: குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்... நம்ப முடியாத ஊதிய உயர்வு

Published: Jul 13, 2025, 09:49 AM IST|Updated: Jul 13, 2025, 09:49 AM IST

8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் வரவுள்ள முக்கிய மாற்றங்கள் என்ன? ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? இதை எது தீர்மானிக்கும்? இந்த விவரங்கள் அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.

8th Pay Commission Salary Hike: 10 வருடங்களுக்கு ஒரு முறை ஊதியக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இவை மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை திருத்துகின்றன. ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் இவை திருத்தப்படுகின்றன. ஊதியக்குழுக்கள் அரசு ஊழியர்களின் நிதி நிலையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

8th Pay Commission1/11

8வது ஊதியக்குழு

இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 8வது ஊதியக் குழுவை உருவாக்க ஒப்புதல் அளித்தது. இருப்பினும், ஆணையம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்த போதிலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

Central Government Employees2/11

மத்திய அரசு ஊழியர்கள்

10 வருடங்களுக்கு ஒரு முறை அமைக்கப்படும் ஊதியக் குழு, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் திருத்துகிறது. அரசு ஊழியர்களின் நிதி நிலையை மேம்படுத்துவதில் இந்த ஆணையம் முக்கிய பங்கு வகிக்கிறது.

What is Fitment Factor3/11

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்றால் என்ன

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்றால் என்ன? ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்த பயன்படுத்தப்படும் ஒரு பெருக்கி ஆகும். பணவீக்கம், ஊழியர்களின் தேவைகள் மற்றும் அரசாங்கத்தின் நிதி திறன் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த காரணி தீர்மானிக்கப்படுகிறது.

7th Pay Commission4/11

7வது ஊதியக்குழு

7வது ஊதியக் குழுவின் கீழ் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. இது 2016 முதல் அமலுக்கு வருகிறது. இந்த காரணி மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை குறைந்தபட்சம் ₹ 18,000 ஆக உயர்த்தியுள்ளது.

Zero Dearness Allowance5/11

பூஜ்ஜிய அகவிலைப்படி

7வது ஊதியக் குழுவில் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டர் பயன்படுத்தப்பட்டது, இதன் விளைவாக அடிப்படை ஊதியத்தில் 14.3% அதிகரிப்பு ஏற்பட்டது. புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படும் போது அகவிலைப்படியை பூஜ்ஜியமாக ரீசெட் செய்யும் வழக்கம் உள்ளது. இது 8வது ஊதியக் குழுவிலும் நடக்க வாய்ப்புள்ளது, இது ஊழியர்களின் ஊதிய அமைப்பில் மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

Central Governmanet Employees6/11

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பின்வரும் கூறுகளைக் கொண்டுள்ளது. அடிப்படை ஊதியம்: மொத்த வருமானத்தில் சுமார் 51.5%. அகவிலைப்படி (DA): மொத்த வருமானத்தில் சுமார் 30.9%. வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA): மொத்த வருமானத்தில் சுமார் 15.4%. போக்குவரத்து கொடுப்பனவு (TA): மொத்த வருமானத்தில் சுமார் 2.2%. (இந்த புள்ளிவிவரங்கள் ஆம்பிட் நிறுவன பங்குகளின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டவை.)

Central Govrenment Pensioners7/11

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்

8வது ஊதியக் குழு பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பயனளிக்கும். இது தவிர, ஓய்வு பெற்ற பணியாளர்கள் உட்பட சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் திருத்தப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What is 8th Pay Commission8/11

8வது ஊதியக் குழு என்றால் என்ன

8வது ஊதியக் குழு என்றால் என்ன? 8வது ஊதியக் குழு என்பது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியத்தை திருத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு குழுவாகும். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமைக்கப்பட்டு சம்பள அமைப்பு மதிப்பாய்வு செய்யப்படுகின்றது.

Salary Hike9/11

ஊதிய உயர்வு

8வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 - 2.86 -க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவற்றின் அடிப்படையில் குறைந்தபட்ச சம்பளமான ரூ.18,000 வாங்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் என பார்க்கலாம். 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.34,560, 2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.37,440, 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.41,040, 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.46,260, 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.51,480

Pension Hike10/11

ஓய்வூதிய உயர்வு

1.92 - 2.86 ஃபிட்மெண்ட் ஃபாக்டர்களில் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? இவற்றின் அடிப்படையில் ரூ.30,000 வாங்கும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும் என இங்கே காணலாம். 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.57,600, 2.08 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.62,400, 2.28 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.68,400, 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.77,100, 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டர் - ரூ.85,800.

Disclaimer11/11

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.