8வது ஊதியக்குழு: பன்மடங்கு உயரும் மாத சம்பளம், காரணம் ஃபிட்மென்ட் ஃபாக்டர்.... கணக்கீடு இதோ

Published: Oct 04, 2025, 08:31 AM IST|Updated: Oct 04, 2025, 08:31 AM IST

8வது ஊதியக்குழு: பன்மடங்கு உயரும் மாத சம்பளம், காரணம் ஃபிட்மென்ட் ஃபாக்டர்.... கணக்கீட்டை இங்கே புரிந்துகொள்ளலாம்

8th Pay Commission Latest News: ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது ஒரு பெருக்கியாகும். பழைய அடிப்படை ஊதியத்துடன் ஃபிட்மென்ட் ஃபாக்டர் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுகின்றது. பல்வேறு ஃபிட்மென்ட் ஃபாக்டர்களில் சாத்தியமான ஊதிய உயர்வை பற்றி இங்கே காணலாம்.

Central Government Employees1/11

மத்திய அரசு ஊழியர்கள்

8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆனால், இந்த காத்திருப்பு நீண்டுகொண்டே இருக்கின்றது.

8th Pay Commission2/11

8வது ஊதியக் குழு

ஜனவரி 2025 இல் 8வது மத்திய ஊதியக் குழுவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. மேலும் புதிய ஊதியக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரை அரசாங்கம் இன்னும் இறுதி செய்யவில்லை.

Pensioners3/11

ஓய்வூதியதாரர்கள்

புதிய சம்பள கமிஷனை அமல்படுத்துவதால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இது அவர்களது வாழ்வில் ஒரு வரப்பிரசாதமாய் வரும்.

8th Pay Commission4/11

8வது ஊதியக் குழு

8வது ஊதியக் குழு குறித்து மாநில அரசுகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய அரசு சமீபத்தில் கூறியது. குழுவின் அமைப்பு தொடர்பாக விரைவில் ஒரு அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Fitment Factor5/11

ஃபிட்மென்ட் ஃபாக்டர்

ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது ஊதியக்குழுக்களில் மிக முக்கியமான ஒரு காரணியாக பார்க்கப்படுகின்றது. அப்போதை அடிப்படை ஊதியத்துடன் ஃபிட்மென்ட் ஃபாக்டர் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் தீர்மானிக்கப்படுகின்றது. பிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் திருத்தப்பட்ட சம்பளத்தைக் கணக்கிடுவதற்கான அடிப்படை சூத்திரம்: திருத்தப்பட்ட சம்பளம் = அடிப்படை ஊதியம் × பிட்மென்ட் காரணி.

Fitment Factor6/11

ஃபிட்மெனண்ட் ஃபாக்டர்

8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.8 முதல் 2.86 -க்குள் இருக்கும் என கூறப்படுகின்றது. பல்வேறு ஃபிட்மென்ட் ஃபாக்டர்களில் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியம் எவ்வளவு உயரும் என காணலாம்.

Salary Hike7/11

ஊதிய உயர்வு

1.8 ஃபிட்மென்ட் ஃபாக்டர்: ஊழியர்களுக்கான புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் - ரூ.32,400 / ஓய்வூதியதாரர்களுக்கான புதிய குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் - ரூ.16,200. 1.92 ஃபிட்மென்ட் ஃபாக்டர்: ஊழியர்களுக்கான புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் - ரூ.34,560 / ஓய்வூதியதாரர்களுக்கான புதிய குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் - ரூ.17,280

Salary Hike8/11

சம்பள உயர்வு

2.00 ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: ஊழியர்களுக்கான புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் - ரூ.36,000 / ஓய்வூதியதாரர்களுக்கான புதிய குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் - ரூ.18,000. 2.08 ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: ஊழியர்களுக்கான புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் - ரூ.37,440  / ஓய்வூதியதாரர்களுக்கான புதிய குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் - ரூ.18,720

Pension Hike9/11

ஓய்வூதிய உயர்வு

2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர்: ஊழியர்களுக்கான புதிய குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் - ரூ.46,260 / ஓய்வூதியதாரர்களுக்கான புதிய குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் - ரூ.23,130. 9 2.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டர்: ஊழியர்களுக்கான புதிய குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் - ரூ.51,480 / ஓய்வூதியதாரர்களுக்கான புதிய குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் - ரூ.25,740

8th CPC Latest News10/11

8வது ஊதியக்குழு

8வது ஊதியக்குழு அமலுக்கு வரும்போது, அப்போது இருக்கும் அகவிலைப்படி அடைப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும். அதன் பிறகு அகவிலைப்படி பூஜ்ஜியமாக ரீசெட் செய்யப்படும்.

Disclaimer11/11

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.