8வது ஊதியக்குழு: ஊதியம், ஓய்வூதியம் மட்டுமல்ல அலவன்சுகளும் அதிரடியாய் அதிகரிக்கும், கணக்கீடு இதோ

Published: Apr 18, 2025, 01:25 PM IST|Updated: Apr 18, 2025, 04:26 PM IST

8th Pay Commission: 8வது ஊதியக் குழு என்றால் என்ன? அதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் என்ன தாக்கம் ஏற்படும்? ஊதிய உயர்வும் ஓய்வூதிய உயர்வும் எவ்வளவு இருக்கும்? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8வது ஊதியக்குழுவின் மூலம் அதிக நன்மைகள் கிடைக்கும். புதிய ஊதியக்குழுவின் மூலம், ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு திருத்தப்பட்ட கொடுப்பனவுகள் என பல வகையான அம்சங்களில் ஏற்றம் இருக்கும். இதன் மூலம் பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வருவாயை அதிகரிப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும்.

Central Government Employees1/11

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8வது உதியக்குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டது. இது நாட்டின் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணச் செய்தியாக வந்தது. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இதில் பணவீக்க நிலைக்கு ஏற்ப சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்கள் திருத்தப்படுகின்றன.

8th Pay Commission2/11

8வது ஊதியக் குழு

8வது ஊதியக்குழு நாட்டில் உள்ள சுமார் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய ஊதிய அமைப்பை முடிவு செய்யும். இதற்கான குழு இந்த மாதம் அமைக்கப்படும் என்றும், புதிய ஆணையம் 2026 ஜூன் மாதத்திற்குள் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என்றும், ஜனவரி 1,2027 முதல் இது முழுமையாக அமலுக்கு வரலாம் என்றும் நம்பப்படுகின்றது. எனினும் ஜனவரி 1, 2026 முதலான நிலுவைத் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும்.

What is 8th Pay Commission3/11

8வது ஊதியக்குழு என்றால் என்ன

8வது ஊதியக் குழு என்றால் என்ன? அதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் என்ன தாக்கம் ஏற்படும்? ஊதிய உயர்வும் ஓய்வூதிய உயர்வும் எவ்வளவு இருக்கும்? இந்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

 

Central Government Employees4/11

மத்திய அரசு ஊழியர்கள்

8வது ஊதியக் குழு என்பது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதிய அமைப்பைப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஒரு உயர்மட்டக் குழுவாகும். ஊழியர்களின் வருமானம் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப இருக்கும் வகையில் அரசாங்கம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதை மதிப்பாய்வு செய்கிறது.

Salary Hike5/11

ஊதிய உயர்வு

8வது சம்பளக் குழுவின் கீழ், 20% முதல் 35% வரை சம்பள உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இது 8வது உதியக்குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இந்த முறை ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.5 முதல் 2.86 -க்குள் இருக்கலாம் என கூறப்படுகின்றது.

Salary Hike6/11

சம்பள உயர்வு

உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் தற்போது ரூ.18,000 ஆக உள்ளது என வைத்துக்கொள்வோம். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், புதிய சம்பளம் சுமார் ரூ.51,480 வரை உயரக்கூடும். இது ஊழியர்களின் மாத வருமானத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

Pension Hike7/11

ஓய்வூதிய உயர்வு

8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியத்திலும் மிகப்பெரிய அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆணையம் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது. இது ரூ.25,740 ஆக அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.

DA Merger8/11

அகவிலைப்படி இணைப்பு

இது தவிர, அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத் தொகையில் அகவிலைப்படியை (DA) சேர்க்கும் திட்டமும் உள்ளது. இது மொத்த ஓய்வூதியத்தை மேலும் அதிகரிக்கும்.

Allowances9/11

அலவன்சுகள்

8வது சம்பளக் குழுவின் மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல கொடுப்பனவுகளிலும் மாற்றங்கள் இருக்கும். அவற்றில் முக்கியமானவை இதோ. அகவிலைப்படி (DA): இதை புதிய அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதற்கான பரிந்துரை உள்ளது. இதனால் வருமானம் நிலையான ஏற்றத்தைக் காணும். வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA): நகரங்களின் வகையைப் பொறுத்து இது அதிகரிக்கப்படும். பெருநகரங்களில் வசிக்கும் மக்களுக்கு அதிக HRA கிடைக்கும். பயணப்படி (TA): இந்த அலவன்சிலும் நல்ல ஏற்றம் இருக்கும் என கூறப்படுகின்றது.

Pensioners10/11

ஓய்வூதியதாரர்கள்

8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊதியக் கமிஷன் அவர்களின் வருமானத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் நிதி நிலைமையையும் வலுப்படுத்தும். நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரிக்கும் நிலையில், அரசாங்கத்தின் இந்த முயற்சி ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய நவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.

 

Disclaimer11/11

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.