8வது ஊதியக்குழு: ஊதிய உயர்வு எவ்வளவு தெரியுமா? ஊழியர்களுக்கு அசத்தல் அப்டேட் இதோ

8th Pay Commission: 8வது ஊதியக் குழு பற்றிய முக்கிய அப்டேட் வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் கூறியது என்ன? முழுமையான தகவலை இங்கே காணலாம்.

8th Pay Commission: ஜனவரி மாதம் மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. கூடிய விரைவில் எட்டாவது ஊதிய குழுவிற்கான தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு குழுவின் பரிந்துரைகள் அரசாங்கத்தால் பெறப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது ஊதியக் குழு தொடர்பான சில முக்கிய புதுப்பித்தல்களை நாடாளுமன்றத்தில் வழங்கினார்.

1 /12

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வரும் வாரங்களில் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. 8வது ஊதியக் குழுவின் உருவாக்கம் அவற்றில் முக்கியமான ஒன்றாகும்.

2 /12

ஜனவரி மாதம் மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுவாக ஊதிய குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 7வது ஊதியக்குழு 2016 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் எட்டாவது ஊதிய குழு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

3 /12

எனினும் 8வது ஊதிய குழுவின் உருவாக்கத்திற்கு தாமதம் ஏற்பட்டதால், ஏப்ரல் 2026 முதல் இது அமலுக்கு வரக்கூடும் என்று பல பொருளாதார நிணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

4 /12

இதற்கிடையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது ஊதியக் குழு தொடர்பான சில முக்கிய புதுப்பித்தல்களை நாடாளுமன்றத்தில் வழங்கினார். எட்டாவது ஊதிய குழுவின் விதிமுறைகள் குறித்து உள்துறை அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித்துறை பாதுகாப்பு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களிடமிருந்து கருத்துகள் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

5 /12

கூடிய விரைவில் எட்டாவது ஊதிய குழுவிற்கான தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு குழுவின் பரிந்துரைகள் அரசாங்கத்தால் பெறப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

6 /12

சுமார் 36.57 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 33.91 லட்சம் ஓய்வூதியதாரர்களும், பாதுகாப்புத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களும் எட்டாவது ஊதிய குழுவின் கீழ் நன்மைகளை பெறுவார்கள் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.

7 /12

8வது ஊதியக்குழு அமலுக்கு வந்தவுடன் லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஊதிய உயர்வு மற்றும் சம்பள உயர்வின் முக்கிய காரணியாக ஃபிட்மெண்ட் ஃபாக்டர் இருக்கும்.

8 /12

பிட்மெண்ட் ஃபேக்டர் என்பது பெருக்கல் காரணி ஆகும். முந்தைய ஊதிய குழுவில் உள்ள அடிப்படை சம்பளத்துடன் இந்த எண் பெருக்கப்பட்டு ஊதிய குழுவின் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்படுகின்றது. ஆகையால் பிட்மெண்ட் ஃபேக்டர் என்ற இந்த எண் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

9 /12

8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எவ்வளவு இருக்கும் என்பது குறித்து பல ஊகங்கள் நிலவி வருகின்றன. 1.92, 2.08 மற்றும் 2.86 ஆகியவற்றில் ஒன்று பிட்மெண்ட் ஃபேக்டராக எண்ணாக அரசால் தீர்மானிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

10 /12

8வது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 -இலிருந்து ரூ.51,480 ஆக உயரும். இது மிகப்பெரிய சம்பள உயர்வாக இருக்கும்.

11 /12

அதேபோல், ஓய்வூதியத்திலும் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். 2.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்பட்டால், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 -இலிருந்து ரூ.25,740 ஆக ஏற்றம் காணும். இது ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.

12 /12

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.