8வது ஊதியக்குழு: அடி தூள்!! லெவல் 1 மத்திய அரசு ஊழியர்களுக்கு 14%-54% சம்பள உயர்வு

8th Pay Commission Latest News: லெவல் 1 மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? ரூ.18,000 அடிப்படை சம்பளம் ரூ.44,280 ஆக அதிகரிக்க வாய்ப்பு. முழுமையான கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.

8th Pay Commission Salary Hike: மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வு ஆகியவற்றை தீர்மானிப்பதில், ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு முக்கிய பங்கு உள்ளது.  ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் லெவல் 1 ஊழியர்களின் சாத்தியமான ஊதிய உயர்வை பற்றி இங்கே காணலாம்.

1 /10

சென்ற வாரம் 8வது ஊதியக்குழுவின் பரிந்துரை விதிமுறைகளை (TOR) மத்திய அமைச்சரவை அங்கீகரித்தது. இது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் பெரிய மாற்றங்களுக்கு முறையாக அடித்தளம் அமைத்தது. நீதிபதி (ஓய்வு) ரஞ்சனா தேசாய் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குவார்.

2 /10

புதிதாக அமைக்கப்பட்டுள்ள 8வது ஊதியக்குழு 18 மாதங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. வரும் மாதங்களில் சம்பள உயர்வுகளுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிட்மெண்ட் ஃபாக்டர் உட்பட பல முக்கிய காரணிகள் பற்றிய செய்திகள் கிடைக்கும். அதன் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு முன்பு குழு பல பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்கும்.

3 /10

மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய உயர்வு ஆகியவற்றை தீர்மானிப்பதில், ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு முக்கிய பங்கு உள்ளது. தற்போதைய அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் தீர்மானிக்கப்படுகின்றது. 

4 /10

8வது ஊதியக்குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 முதல் 3.0 -க்குள் இருக்கும் என்ற பரவலான கருத்து உள்ளது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.8 முதல் 2.46 -க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கோடக் நிறுவன ஈக்விட்டிஸ் மற்றும் ஆம்பிட் கேபிட்டலின் ஆராய்ச்சி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

5 /10

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.8 முதல் 2.46 -க்குள் நிர்ணயிக்கப்பட்டால், அது பியூன்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட லெவல் 1 ஊழியர்களின் அடிப்படை குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.18,000 இலிருந்து ரூ.32,400 ஆக அதிகரிக்கும்.

6 /10

இது லெவல் 1 மத்திய அரசு ஊழியர்களுக்கு சுமார் 80% சம்பள உயர்வைக் குறிக்கும். எனினும், உண்மையான உயர்வு இதை விட சற்று குறைவாக இருக்கும், ஏனெனில் அகவிலைப்படி பூஜ்ஜியத்திற்கு மீட்டமைக்கப்படும். புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்படும் போதெல்லாம் இது வழக்கமாகச் செய்யப்படும் ஒரு செயல் என்று அறிக்கை கூறுகிறது. 

7 /10

தற்போது, ​​அகவிலைப்படி 58% ஆகவும், வீட்டு வாடகைப் படியுடன், நிலை 1 ஊழியர்களின் மொத்த தொடக்க நிலை சம்பளம் தோராயமாக ₹29,000 ஆகவும் உள்ளது, அதாவது பயனுள்ள அதிகரிப்பு தோராயமாக 13% ஆகும். 1.82 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் சம்பள உயர்வு 14% ஐ எட்டக்கூடும் என்றும், 2.15 ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் 34% ஊதிய உயர்வு இருக்கும் என்றும் ஆம்பிட் கேபிடல் சுட்டிக்காட்டியுள்ளது. ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.46 ஆக நிர்ணயிக்கப்பட்டால், நிலை 1 மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 54% அதிகரிக்கக்கூடும். இது மிகப்பெரிய ஊதிய உயர்வாக இருக்கும்.

8 /10

தரகு நிறுவனத்தால் மதிப்பிடப்பட்ட ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில், லெவல் 1 ஊழியர்களுக்கான சாத்தியமான ஊதிய உயர்வுகளைப் பற்றி இங்கே காணலாம்: 1.82 ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: ரூ.18,000 அடிப்படை சம்பளம் ரூ.32,760 ஆக அதிகரிக்கலாம் / 2.15 ஃபிட்மெண்ட் ஃபாக்டர்: ரூ.18,000 அடிப்படை சம்பளம் ரூ.38,700 ஆக அதிகரிக்கலாம் / 2.46 ஃபிட்மெண்ட் ஃபாக்ட: ரூ.18,000 அடிப்படை சம்பளம் ரூ.44,280 ஆக அதிகரிக்கலாம்.

9 /10

இருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் அடிப்படை சம்பளத்தை மட்டுமே பிரதிபலிக்கின்றன. தற்போதைய 58% அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவு ஆகியவற்றை சேர்த்த பிறகு இவற்றில் மாற்றம் ஏற்படக்கூடும்.

10 /10

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.