8வது ஊதியக்குழு: பியூன் முதல் அதிகாரி வரை.... லெவெல் வாயரியாக சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்?

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல். பியூன் முதல் அதிகாரி வரை, யாருக்கு எவ்வளவு சம்பள உயர்வு? முழுமையான கணக்கீட்டை இங்கே காணலாம்.

8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியத்தில் மாற்றங்களை பரிந்துரைக்கும். பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பளம் அதிகரிக்கப்படும். 8வது ஊதியக் குழுவில் நிர்ணயிக்கப்படும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊதிய உயர்வும் ஓய்வூதிய உயர்வும் இருக்கும்.

1 /11

8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 2025 -இல் முடிவடைகின்றன. அதன் பிறகு ஜனவரி 2026 முதல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வர வேண்டும்.

2 /11

ஜனவரி 16, 2025 அன்று, மத்திய அரசு 8வது ஊதியக் குழுவுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த ஒப்புதலுக்குப் பிறகு, லட்சக்கணகான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால் இன்னும் ஆணைய உறுப்பினர்களின் நியமனமே நடக்கவில்லை.

3 /11

8வது ஊதியக்குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு, குறிப்பு விதிமுறைகள் இறுதி செய்யப்பட வேண்டும். அதன் பிறகு பரிந்துரைகளை குழு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். அதன் பிறகு அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும்.

4 /11

இந்த செயல்முறைக்கு குறைந்தபட்சம்  1 1/2 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகின்றது. இது 2026 ஆம் ஆண்டின் மத்தியில் அல்லது 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமலுக்கு வரக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் ஜனவரி 1, 2026 முதல் இதன் நன்மைகளுக்கான அரியர் தொகை கிடைக்கும்.

5 /11

8வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியத்தில் மாற்றங்களை பரிந்துரைக்கும். பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பளம் அதிகரிக்கப்படும். 8வது ஊதியக் குழுவில் நிர்ணயிக்கப்படும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊதிய உயர்வும் ஓய்வூதிய உயர்வும் இருக்கும்.

6 /11

8வது ஊதியக் குழுவில், சம்பளத்தை நிர்ணயிக்கும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் ஏற்கனவே உள்ள அடிப்படை ஊதியத்துடன் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் உருவாக்கப்படுகின்றது. 7வது ஊதியக் குழுவில் இது 2.57 ஆக இருந்தது, இது குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தியது.

7 /11

இப்போது 8வது ஊதியக்குழுவில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக இருக்கலாம் என ஊகங்கள் உள்ளன. இருப்பினும், அதற்கான முடிவு குழுவிடம் உள்ளது. ஊழியர் அமைப்பு NC-JCM 2.86 அல்லது அதற்கு மேலான ஃபிட்மென்ட் ஃபாக்டரை கோரியுள்ளது. ஆனால் அது 1.92 முதல் 2.86 -க்குள் இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

8 /11

8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? சில உதாராணங்களின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். 2.86 ஃபிட்மென்ட் ஃபாக்டரின் படி சம்பள மதிப்பீட்டை இங்கே காணலாம்.

9 /11

பியூன் (நிலை-1): தற்போது ரூ.18,000, புதிய சம்பளம் ரூ.51,480. ஓய்வூதியம் ரூ.9,000 லிருந்து ரூ.25,740 ஆக அதிகரிக்கும். நிலை-2 ஊழியர்கள்: தற்போது ரூ.19,900, புதிய சம்பளம் ரூ.56,914. நிலை-6 (நடுத்தர-நிலை) ஊழியர்கள்: தற்போது ரூ.35,400, புதிய சம்பளம் ரூ.1,01,244. ஐஏஎஸ்/ஐபிஎஸ் (நிலை-10): தற்போது ரூ.56,100, புதிய சம்பளம் ரூ.1,60,446.

10 /11

இது ஒரு மதிப்பீடு மட்டுமே. கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பள உயர்வு மாறுபடலாம். பல தரகு நிறுவனங்களும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் இதைச் சுற்றி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளன.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.