8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவில் பல முக்கிய அப்டேட்கள் கிடைக்கவுள்ளன. அவற்றில் 8வது உதியக்குழு குறித்த விவரங்கள் முக்கியமானவை.
8th Pay Commission: 8வது ஊதியக் குழு தொடர்பான அறிவிப்பு ஜனவரி 17, 2025 அன்று வெளியிடப்பட்டது, அதன் உருவாக்கம் ஏப்ரல் 2025 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8வது சம்பளக் குழுவிற்கான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.28 முதல் 2.86 -க்குள் இருக்கலாம் என ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இதன் விளைவாக 40 முதல் 50 சதவீதம் வரை சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்திய அரசு சமீபத்தில் 8வது ஊதியக் குழுவை உருவாக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இது சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆணையம் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகின்றது. இருப்பினும், அதன் குழு தலைவர் மற்றும் அறிவிப்புகளுக்கான அறிவிப்பு இன்னும் வரவில்லை. இது தொடர்பான செயல்முறைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.
8வது ஊதியக் குழு தொடர்பான அறிவிப்பு ஜனவரி 17, 2025 அன்று வெளியிடப்பட்டது, அதன் உருவாக்கம் ஏப்ரல் 2025 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் உருவாக்கப்படுகின்றன.
7வது ஊதியக் குழு 2016 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அதன் பரிந்துரைகள் டிசம்பர் 2024 உடன் முடிவடைகின்றன. ஆகையால் ஜனவரி 2025 முதல் 8வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும். இருப்பினும், சில அறிக்கைகள் அதன் செயல்படுத்தலில் தாமதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறிப்பிட்டுள்ளன.
ஊதியக்குழுவால் தீர்மானிக்கப்படும் ஒரு முக்கியமான அம்சம் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஆகும். இதன் அடிப்படையில் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இது குறித்த பல ஊகங்கள் பரவி வருகின்றன.
7வது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது, இதன் விளைவாக சராசரியாக 23.55 சதவீதம் சம்பள உயர்வு ஏற்பட்டது. 8வது சம்பளக் குழுவிற்கான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.28 முதல் 2.86 -க்குள் இருக்கலாம் என ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இதன் விளைவாக 40 முதல் 50 சதவீதம் வரை சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இலிருந்து தோராயமாக ரூ.51,480 ஆக உயரும். இது மிகப்பெரிய சம்பள உயர்வாக இருக்கும். இதன் அடிப்படையில் பிற அலவன்சுகளிலும் ஏற்றம் இருக்கும்.
அதே போல், 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக மாறினால், ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய அதிகரிப்பை காண்பார்கள். அவர்களது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 -இலிருந்து ரூ.25,740 ஆக அதிகரிக்கும்.
எனினும், 2.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டர் சாத்தியமற்றதாக பார்க்கப்படுவதாக முன்னாள் நிதிச் செயலாளர் சுபாஷ் கார்க் கூறியுள்ளார். அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை தோராயமாக 1.92 அல்லது தற்போது இருக்கும் 2.57 என்ற அளவிலேயே வைக்கக்கூடும் என்பது அவர் கருத்தாக உள்ளது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் இப்போதிருக்கும் 2.57 ஆகவே தொடரப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இலிருந்து தோராயமாக ரூ.34,560 ஆக உயரும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 -இலிருந்து ரூ.23,130 ஆக உயரும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.