8th pay commission Salary Hike: 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எவ்வளவு இருக்கும்? ஊதியம் 2 மடங்கு அதிகரிக்குமா? முழுமையான கணக்கீட்டை இந்த பதிவில் காணலாம்.
8th pay commission Latest News: ஊதியக்குழுக்களின் அடிப்படை ஊதிய கணக்கீட்டில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. புதிய அடிப்படை சம்பளத்தை தீர்மானிக்க பழைய அடிப்படை சம்பளம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கபடுகின்றது. 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1/10மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக ஆவலுடன் காத்திருகிறார்கள். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் 8வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க சம்பள உயர்வைக் கொண்டுவர உள்ளது.
2/108வது ஊதியக்குழுவின் அமலாக்கம் 2027 வரை தாமதமானாலும் கூட, அதன் ஊதியக் கட்டமைப்பு ஜனவரி 1, 2026 முதல் கணக்கில் கொள்ளப்படும். இந்த மாற்றம் நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்கும் சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும்.
3/10ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. புதிய அடிப்படை சம்பளத்தை தீர்மானிக்க பழைய அடிப்படை சம்பளம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கபடுகின்றது. உதாரணமாக, 6வது ஊதியக் குழுவில், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ₹7,000 ஆக இருந்தது. 7வது ஊதியக் குழுவில், இது 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு, ₹18,000 ஆக உயர்ந்தது.
4/108வது ஊதியக் குழுவிற்கான ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92 முதல் 2.86 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தற்போதைய பொருளாதார நிலை, அரசிற்கு உள்ள நிதிச்சுமை ஆகியவற்றை கருத்தில்கொண்டு, இது 1.96 ஆக நிர்னயிக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.
5/10ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.96 ஆக நிர்ணயிக்கப்பட்டால், தற்போதைய குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான ₹18,000 ₹35,280 ஆக அதிகரிக்கக்கூடும். இதில் அகவிலைப்படி (DA) சேர்க்கப்படாது, ஆனால் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) சேர்க்கப்படும். இது நகர வகையைப் பொறுத்து மாறுபடும்.
6/10பழைய அடிப்படை சம்பளம் × 1.96 = புதிய அடிப்படை சம்பளம் (8வது சம்பளக் குழுவின் கீழ்). அனைத்து லெவல் ஊழியர்களுக்கும் (நிலை 1 முதல் நிலை 18 வரை) புதிய அடிப்படை சம்பளத்தை மதிப்பிட இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்.
7/10உதாரணமாக லெவல் 9 மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு கணக்கீட்டை இங்கே பார்க்கலாம். லெவல் 9 மத்திய அரசு ஊழியரின் தற்போதைய சம்பளம்: 53,100 / அகவிலைப்படி (58%): 30,798 / HRA (27%): 14,337 / மொத்த சம்பளம்: 98,235. 8வது ஊதியக் குழுவின் கீழ்: புதிய அடிப்படை ஊதியம் = 53,100 x 1.96 = 1,04,076. அகவிலைப்படி (மீட்டமைக்கப்பட்ட பிறகு): 0 / HRA (27%): 28,100 / மொத்த சம்பளம்: 1,32,177.
8/10ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தும் செயல்முறை நிறைவடைய ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆகலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சம்பள உயர்வு ஜனவரி 2026 முதல் அமலுக்கு வருவதாக கருதப்படும்.
9/10ஜனவரி 2026 முதல் ஊதிய உயர்வு கருதப்படுவதால், ஊழியர்களுக்கு ஜனவரி முதல் அரியர் தொகை வழங்கப்படும். மதிப்பீடுகளின் படி மாற்றங்கள் நடந்தால், 8வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரையிலான மிகப்பெரிய சம்பள சீர்திருத்தமாக இருக்கலாம்.
10/10பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.