8வது ஊதியக்குழு: லெவல் 1 டு லெவல் 10 மத்திய அரசு ஊழியர்கள்... யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு?

Published: Sep 27, 2025, 08:33 AM IST|Updated: Sep 27, 2025, 08:33 AM IST

8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்? லெவல் வாரியாக எவ்வளவு உயர்வு இருக்கும்? முழுமையான கணக்கீட்டை இங்கே காணலாம்.

8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக்குழுவில் புதிய அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்கும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்படலாம் என பல நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படி நடந்தால், ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். லெவல் 1 முதல் லெவல் 10 வரை யாரது சம்பளம் எவ்வளவு உயரும் என இங்கே காணலாம்.

Central Government Employees1/10

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் திருத்தங்களை செய்யும் 8வது ஊதியக்குழுவிற்கு இந்த மாத தொடக்கத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 2025 -இல் நிறைவடைகின்றன. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அமலுக்கு வருவதால், 2026 ஜனவரி முதல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வர வேண்டும். 

8th Pay Commission2/10

8வது உதியக்குழு

8வது உதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் கீழ் ஊழியர்களின் ஊதியம் தீர்மானிக்கப்படும். ஃபிட்மெண்ட் காரணி என்பது ஒரு பெருக்கியாகும். பழைய அடிப்படை ஊதியத்துடன் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் தீர்மானிக்கப்படுகின்றது.

Fitment Factor3/10

ஃபிட்மெண்ட் ஃபாக்டர்

7வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. இது லெவல் 1 இன் சம்பளத்தை ₹7,000 இலிருந்து (6வது ஊதியக்குழு) ₹18,000 ஆக உயர்த்தியது. இருப்பினும், அகவிலைப்படி (DA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), போக்குவரத்து கொடுப்பனவு மற்றும் பிற சலுகைகளையும் சேர்த்தால், மொத்த சம்பளம் ₹36,020 ஆக உயர்கிறது. 

8th Pay Commission4/10

8வது உதியக் குழு

8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 முதல் 3.0 -க்குள் இருக்கும் என கூறப்படுகின்றது, எனினும், பல நிபுணர்கள் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக இருக்கும் என கருதுகிறார்கள். அதன் அடிப்படையில் லெவல் 1 முதல் லெவல் 10 வரை உள்ள மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என இந்த பதிவில் காணலாம்

Central Government Employees5/10

மத்திய அரசு ஊழியர்கள்

லெவல் 1, லெவல் 2 ஊழியர்கள்: நிலை 1 இல் பியூன்கள், உதவியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் உள்ளனர். இவர்களது ₹18,000 அடிப்படை ஊதியம் ₹51,480 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ₹33,480 அதிகரிப்பு. நிலை 2 இல் கீழ் டிவிஷன் கிளார்குகளும் அடங்குவர். இவர்களின் ₹19,900 அடிப்படை ஊதியம் ₹56,914 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இது ₹37,014 அதிகரிப்பாகும்.

8th Pay Commission6/10

8வது உதியக் குழு

லெவல் 3, லெவல் 4 ஊழியர்கள்: காவலர்கள் மற்றும் காவல்துறை அல்லது பொது சேவைகளில் திறமையான ஊழியர்களுடன் கூடிய நிலை 3 ஊழியர்கள் தற்போது ₹21,700 அடிப்படை ஊதியத்தைப் பெறுகிறார்கள். இது ₹62,062 ஆக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ₹40,362 அதிகரிப்பாகும். D கிரேடு ஸ்டெனோகிராஃபர்கள் மற்றும் ஜூனியர் கிளார்க்குகளை உள்ளடக்கிய லெவல் 4 ஊழியர்கள் இப்போது ₹25,500 அடிப்படை ஊதியத்தைப் பெறுகிறார்கள். இது ₹47,430 அதிகரிப்புடன் ₹72,930 ஆக அதிகரிக்கப்படலாம்.

Salary Hike7/10

ஊதிய உயர்வு

லெவல் 5, லெவல் 6 ஊழியர்கள்: சீனியர் கிளார்க்குகள் மற்றும் உயர் மட்ட தொழில்நுட்ப ஊழியர்களை உள்ளடக்கிய லெவல் 5 ஊழியர்கள், ₹29,200 அடிப்படை ஊதியத்தைப் பெறுகிறார்கள். இந்த ஊதியம் ₹54,312 அதிகரிப்புடன் ₹83,512 ஆக திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ள லெவல் 6 பதவிகளின் அடிப்படை ஊதியம் ₹1,01,244 ஆக திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ₹65,844 அதிகரிப்பாக இருக்கும்.

Salary Hike8/10

சம்பள உயர்வு

லெவல் 7, லெவல் 8 ஊழியர்கள்: சூப்பிரண்டுகள், பிரிவு அதிகாரிகள் மற்றும் உதவி பொறியாளர்களைக் கொண்ட லெவல் 7 ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ₹44,900 -இலிருந்து உயர்த்தப்பட்டு ₹1,28,414 ஆக அதிகரிக்கப்படலாம், இது ₹83,514 அதிகரிப்பாகும். ₹47,600 அடிப்படை ஊதியம் பெறும் நிலை 8 மூத்த பிரிவு அதிகாரிகள் மற்றும் உதவி தணிக்கை அதிகாரிகளின் சம்பளம் ₹1,36,136 ஆக அதிகரிக்கப்படலாம். இது ₹88,536 அதிகரிப்பாகும்.

Level 1 to Level 10 Central Government Employees9/10

லெவல் 1 டு லெவல் 10 மத்திய அரசு ஊழியர்கள்

லெவல் 9, லெவல் 10 ஊழியர்கள்: ₹53,100 அடிப்படை ஊதியம் பெறும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் கணக்கு அதிகாரிகள் அடங்கிய லெவல் 9 மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ₹1,51,866 ஆக அதிகரிக்கப்படலாம். இது ₹98,766 அதிகரிப்பாக இருக்கும். இறுதியாக ₹56,100 அடிப்படை ஊதியம் பெறும் சிவில் சேவைகளில் தொடக்க நிலை அதிகாரிகள் போன்ற குரூப் ஏ அதிகாரிகளை உள்ளடக்கிய லெவல் 10, ஊழியர்களின் சம்பளம் ₹1,60,446 ஆக அதிகரிக்கப்படலாம், இது ₹1,04,346 அதிகரிப்பாக இருக்கும்.

Disclaimer10/10

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.