நடிகர் சூர்யா வீட்டில் திருட்டு கும்பல்! ரூ.42 லட்சம் அபேஸ்..என்ன நடந்தது?

Written ByThirishala S.P
Published: Sep 24, 2025, 11:05 AM IST|Updated: Sep 24, 2025, 11:05 AM IST

Actor Surya’s Home Thief Gang: சூர்யா வீட்டில் நடந்த மோசடி செய்தி ரசிகர்களையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நம்பிக்கையை வீழ்த்தும் விதமாக, தனிப்பட்ட போலீஸ் அதிகாரி கூட மோசடிக்குள்ளானார்.

Actor Surya’s Home Thief Gang: சுலோச்சனா மற்றும் அவரது குடும்பம், அதிகாரியிடம் முதலீடு செய்ய சொல்லி, மொத்தம் 42 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டனர். இதுவே சென்னை முழுவதும் 2 கோடி ரூபாய் மோசடி செய்த பெரிய கும்பலின் ஆரம்பம்.

42 lakhs 1/7

42 லட்சம் திருட்டு:

42 லட்சம் திருட்டு: சூர்யாவின் தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு அதிகாரி ஆன்டனி ஜார்ஜ் பிரபு, நடிகரின் வீட்டில் வேலை செய்த சுலோச்சனாவும், அவரது குடும்பமும் சேர்ந்து நடத்திய மோசடியில் சிக்கினார். நடிகர் சூர்யா வீட்டில் இருந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த மோசடியில், 42 லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trust 2/7

வாக்குறுதி:

வாக்குறுதி: சுலோச்சனா மற்றும் அவரது மகன், போலீஸ் அதிகாரி பிரபுவிடம் “நீங்கள் எங்களிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்” என்று சொல்லி வாக்குறுதி கொடுத்தார்கள். பிரபு முதலில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தார். அந்தப் பணத்தை வாங்கிய பிறகு, சுலோச்சனா குடும்பம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக 30 கிராம் தங்கம் அவருக்குத் திருப்பிக் கொடுத்துள்ளனர். அதாவது, “பணம் கொடுத்தால் நிச்சயம் லாபம் வரும்” என்று நம்ப வைக்க, முதலில் சிறிய அளவிலான லாபத்தை (30 கிராம் தங்கம்) திருப்பிக் கொடுத்து அவரை அவர்கள் வழிக்கு கொண்டுவந்தனர்.

Investment 3/7

அதிக முதலீடு:

அதிக முதலீடு: முதலில் 1 லட்சம் கொடுத்தபின் 30 கிராம் தங்கம் திருப்பிக் கிடைத்ததால், பிரபுவுக்கு “இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள்” என்ற உணர்வு வந்தது. அந்த நம்பிக்கையால் அவர் அதிகமாக முதலீடு செய்ய ஆரம்பித்தார். அதன் விளைவாக, ஜனவரி முதல் பிப்ரவரி வரை, அவர் பல தவணைகளாகப் பணம் கொடுத்தார். மொத்தத்தில் 42 லட்சம் ரூபாய் சுலோச்சனா மற்றும் அவரது குடும்பத்தின் கைக்கு சென்றது.

Missing 4/7

திடீரென்று மாயமான குடும்பம்:

திடீரென்று மாயமான குடும்பம்: மார்ச் மாதம் வந்தபின், பிரபு தன் முதலீட்டுத் தொகையை திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டார். ஆனால், அந்த நேரத்தில் சுலோச்சனா மற்றும் அவரது குடும்பத்தினர் எவரும் தொடர்புக்கு வரவில்லை. அவர்கள் திடீரென காணாமல் போய்விட்டனர். இதனால் பிரபுவுக்கு “இவர்கள் உண்மையில் மோசடிக்காரர்கள்” என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் போலீஸில் புகார் அளித்தார், இதுவே விசாரணைக்கான தொடக்கமாக அமைந்தது.

Thief Gang 5/7

மோசடி கும்பல்:

மோசடி கும்பல்: பிரபுவின் புகாருக்குப் பிறகு போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, சுலோச்சனாவின் குடும்பம் மட்டும் பிரபுவையே அல்லாமல், சென்னை முழுவதும் பலரையும் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. பல்வேறு நபர்களிடம் முதலீடு கேட்டு, உயர்ந்த லாபம் தருவோம் என்று வாக்குறுதி அளித்து, அவர்களிடமிருந்து பணம் வாங்கியுள்ளனர். இந்த மோசடி மூலம் அவர்கள் மொத்தத்தில் சுமார் 2 கோடி ரூபாய் வரை பறித்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இது ஒரே ஒருவரிடம் நடந்த மோசடி அல்ல, ஒரு பெரிய அளவிலான கும்பல் மோசடி (ராக்கெட்) என்று போலீஸார் உறுதி செய்தனர்.

Police6/7

போலீஸ் நடவடிக்கை:

போலீஸ் நடவடிக்கை: ஜூலை மாதத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, சுலோச்சனா, பாலாஜி, பாஸ்கர், விஜயலட்சுமி ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சூர்யா வீட்டில் வேலை பார்த்தவர்கள். தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.

Suriya7/7

சூர்யாவின் நடவடிக்கை:

சூர்யாவின் நடவடிக்கை: சூர்யாவின் வீட்டில் வேலை செய்த சுலோச்சனாவும், அவரது குடும்பத்தாரும் மோசடியில் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் நடிகர் சூர்யாவிடம் தெரிவிக்கப்பட்டதும், அவர் உடனடியாக அவர்களை வேலையை விட்டு அனுப்பி விட்டார்.