Aadhaar Card New Rule: ஆதார் அட்டை நகல்களை சேரிக்கும் பழக்கத்தை முடிவுக்கு கொண்ட வர மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளது.
Ban On Aadhaar Card Photo Copy: எனவே, ஹோட்டல்கள் போன்ற இடங்களில் ஆதார் சரிபார்ப்புக்கு இனி நகல் கொடுக்கும் தேவை இருக்காது.
இந்திய மக்களின் பிரதான ஆவணமாக ஆதார் கார்டு இருந்து வருகிறது. ஆதார் கார்டு வங்கி பரிவர்த்தனை முதல் பல சேவைகளுக்கு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை ஹோட்டல்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவன்ஙகள் ஆதார் அட்டையின் புகைப்பட நகல்களை சேமித்து வருகின்றனர்.
குறிப்பாக, ஹோட்டல்களில் சரிபார்ப்புக்காக ஆதார் நகலை பலரும் கொடுத்து வருகின்றனர். மேலும், பலரும் ஆதார் நகலை கைகளில் வைத்து வருகின்றனர். இது போன்ற ஆதார் நகலை சர்பார்ப்புக்கு கொடுப்பது பல மோசடிகளுக்கு வழிவகுக்கும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கருதுகிறது.
மேலும், தற்போதைய ஆதார் சட்டப்படி, ஆதார் நகல்களை வைத்திருப்பதே சட்டவிரோதம் என்றும், இது மிகப்பெரிய பாதுகாப்பு பிரச்னை என கூறப்படுகிறது. ஆதார் அட்டைகளின் நகல்களை சேகரித்து சேமித்து வைப்பதைத் தடுக்கும் நோக்கில் ஒரு புதிய விதியை UIDAI கொண்டு வர உள்ளது.
இதுகுறித்து UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் கூறுகையில் , ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை நடத்தும் ஹோட்டல்கள் மற்றும் சில நிறுவனங்கள் டிஜிட்டல் முறையில் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும். QR குறியீடு, ஸ்கேனிங் மூலமாகவோ அல்லது தற்போது உருவாக்கத்தில் உள்ள புதிய ஆதார் செயலி மூலமாகவோ சரிபார்ப்பை கொண்டு வர வேண்டும்.
இதன் அடிப்படையில் ஆதார் செயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆதார் ஆவணங்களை காகித வடிவில் கையாளும் போது ஏற்படும் அபாயங்கள் குறையும். ஆஃப்லைன் சரிபார்ப்பு தேவைப்படுபவர்களுக்கு, அவர்களின் சொந்த மென்பொருளுடன் ஒருங்கிணைக்க ஒரு API வழங்கப்படும்.
இதன் மூலம் அவர்கள் தங்கள் கணினி அல்லது மென்பொருளில் இந்த சரிபார்ப்பு வசதியை இணைக்கலாம் என கூறியுள்ளார். மேலும் செயலி டூ செயலி மூலம் புதிய மொபைல் ஆப் சோதனை நிலையில் உள்ளது.
இது 2025ஆம் ஆண்டுக்குள் கொண்டு வரப்படும். இது விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், கடைகள் போன்ற இடங்களில் எளிதாக இந்த செயலி பயன்படுத்தப்படும். இதன் மூலம், காகித அடிப்படையிலான சர்பார்ப்புக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.