ஆதார் கார்டில் மேஜர் மாற்றம்.. UIDAI புதிய விதிமுறைகள் இதோ!

Written ByUmabarkavi K
Published: Nov 28, 2025, 01:30 PM IST|Updated: Nov 28, 2025, 01:30 PM IST

Aadhaar Enrolment Rules Revised: ஆதார் கார்டில் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதார் அப்டேட் செய்வதற்கும், புது ஆதார் பெறுவதற்கும் ஆவணங்கள் சமர்ப்பிப்பு குறித்து முக்கிய  தகவல் வெளியாகி உள்ளது.

1/7

இந்தியர்களின் முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. ஆதார் கார்டை குழந்தைகளின் பள்ளிக்கு சேர்ப்பது முதல் அரசு திட்டங்கள் வரை பலவற்றுக்கு ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை அப்டேட் செய்வது அவசியம்

2/7

ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை ஆன்லைனிலே புதுப்பித்து கொள்ளலாம். ஆனால், ஆதாரில் உள்ள மொபைல் நம்பர், பயோமெட்ரிக் விவரங்களை அருகில் இருக்கும் இ சேவை மையம் அல்லது தபால் நிலைய அலுவலகத்தில் மட்டுமே புதுப்பித்து கொள்ள முடியும்.

3/7

இந்த நிலையில், UIDAI ஆதார் கார்டில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதாவது, ஆதார் பெறுவதற்கு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடையாளம், முகவரி, பிறந்த தேதிக்கான சான்றாக மக்கள் சமர்ப்பிக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியலை UIDAI திருத்தம் மேற்கொண்டுள்ளது. 

4/7

அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆதார் அட்டைக்கான பெயருக்கான ஆவணமாக, முகவரிச் சான்று, பிறப்பு சான்று, உறவுமுறை சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், சாதிச் சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம்.

5/7

மேலும், ஆதார் அட்டைக்கான முகவரி சான்றாக பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓய்வூதிய அட்டை, சாதிச் சான்று, மின்சார அட்டை, கேஸ் சிலிண்டர் கார்டு, சொத்து வரி சான்று, வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். அதோடு, பிறந்த தேதிக்கான சான்றாக பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட்,இ பென்சன் கார்டு, உயர்க்கல்வி சான்றிதழ் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.

6/7

உறவு சான்றுக்காக பிறப்பு சான்றிதழ், பெற்றோருடன் இருக்கும் சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு போன்றவற்றை சமர்ப்பிக்கலாம். எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மேற்கண்ட ஆவணங்களை ஆதார் அட்டை பெறுவதற்கு ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என UIDAI கூறியுள்ளது.

7/7

5 வயதுக்குட்பட்டவர்கள் ஆதார் அட்டையை பெற, குடும்ப தலைவரின் ஆவணங்கள் முக்கியமானது. 5 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இருப்பிட சான்று, பிறப்பு சான்றிதழ், கல்விச் சான்றிதழை ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என UIDAI கூறியுள்ளது.