Aadhaar Card Latest Update: குழந்தைகளுக்கான ஆதார் கார்டில் மார்ச் வரை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். எனவே, இதுகுறித்து UIDAI முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆதார் கார்டு முக்கிய ஆவணங்களின் ஒன்றாக இருக்கிறது. குழந்தைகளை பள்ளிக்கு சேர்ப்பது முதல் அரசு திட்டங்கள் வரை பல சேவைகளுக்கு ஆதார் பிரதான ஆவணமாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டு புதுப்பிப்பது அவசியம்.
ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் முகவரி, மொபைல் எண் போன்ற விவரங்களையும் தேவைப்பட்டால் தபால் நிலையம் அல்லது ஆதார் சேவை மையங்களில் மாற்றிக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் ஆதார் கார்ட்டை புதுப்பிப்பதும் அவசியம். 5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு நீல ஆதார் அல்லது பால் ஆதார் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தற்போது பயோமெட்ரிக் அப்டேட்டுகள் இவவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, 2026 மார்ச் வரை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம்.
அதாவது, 5 முதுல் 7 வயதுக்குள் இருப்பவர்களும், 15 முதல் 17 வயதுக்குள் இருப்பவர்களும் மார்ச் வரை இலவசமாக பயோமெட்ரிக் அப்டேட்டுகளை புதுப்பித்து கொள்ளலாம் என UIDAI தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்திற்கு பிறகு ஒவ்வொரு அப்டேட்டிற்கும் ரூ.125 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த நிலையில், எப்படி ஈஸியாக குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்கலாம் என்பது குறித்து UIDAI விளக்கம் அளித்துள்ளது. முதலில், UIDAI இணையதளம் வாயிலாக அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை கண்டுபிடித்து, ஆன்லைனில் அதனை விசிட் செய்ய முன்பதிவு செய்ய வேண்டும்
குழந்தையின் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் போன்றவற்றை உள்ளிட வேண்டும். இதன்பின்பு, உங்களுக்கான நேரம் மற்றும் நாள் தெரிவிக்கப்படும். அநத் நாளில் ஆதார் மையத்திற்கு குழந்தையுடன் சென்று, அதிகாரிகள் கொடுக்கும் படிவத்தை நிரப்ப வேண்டும். இதன்பின்பு, குழந்தைக்கான கைரேகை, கருவிழி, புகைப்டத்தை இலவசமாக அப்டேட் செய்யலாம்.
இதன்பிறகு, அப்டேட் செய்யப்பட்ட ஆதார் கார்டு பெற்றோரின் முகவரிக்கு அனுப்பப்படும். எனவே, உங்கள் குழந்தைகளுக்கான ஆதார் கார்டை உடனே புதுப்பித்து கொள்ள வேண்டும். இதற்கு மார்ச் தான் கடைசி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.